ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அம்புஜா சிமெண்ட்ஸ் முதல் காலாண்டு லாபம் 36% சரிவு!

அம்புஜா சிமெண்ட்ஸ், விற்பனை சரிவு காரணமாக, அதன் ஒருங்கிணைந்த லாபம் 36.6 சதவீதம் குறைந்து இருப்பதாக தெரிவித்தது.

அம்புஜா சிமெண்ட்ஸ்

Published On :28 ஜூலை 2026, 10:29 pm IST

அதானி குழுமத்தைச் சேர்ந்த அம்புஜா சிமெண்ட்ஸ், விற்பனை சரிவு காரணமாக, 2027 நிதியாண்டின் ஜூன் காலாண்டில் வரிக்குப் பிந்தைய அதன் ஒருங்கிணைந்த லாபம் 36.6 சதவீதம் குறைந்து ரூ. 660 கோடியாக இருப்பதாக நிறுவனம் இன்று அறிவித்தது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வரிக்குப் பிந்தைய லாபம் ரூ. 1,041 கோடியாக இருந்தது. அதே வேளையில், நிதியாண்டின் ஜூன் வரையான காலாண்டில், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 7.51 சதவீதம் குறைந்து ரூ. 9,474 கோடியாக இருப்பதாக தெரிவித்தது. அதே வேளையில், அதன் மொத்த விற்பனை அளவு கடந்த ஆண்டு 19.9 மில்லியன் டன்களிலிருந்து தற்போது 17.1 மில்லியன் டன்னாகக் குறைந்தது.

நடப்பு இக்காலாண்டில் சிமெண்ட் விற்பனை மூலம் கிடைத்த வருவாய் 8.57 சதவீதம் குறைந்து ரூ. 9,062 கோடியாக இருந்தது. 'ரெடி மிக்ஸ் கான்கிரீட்' மூலம் கிடைத்த வருவாய் 20.42 சதவீதம் குறைந்து ரூ. 507 கோடியாக இருந்தது. அதே வேளையில், பிற வருமானங்களையும் உள்ளடக்கிய மொத்த வருவாய் 8.3 சதவீதம் குறைந்து ரூ. 9,669 கோடியாக இருந்தது.

2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் அம்புஜா சிமெண்ட்ஸின் மொத்தச் செலவுகள் 3.92 சதவீதம் குறைந்து ரூ. 8,802 கோடியாக இருந்தது.

2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் அம்புஜா சிமெண்ட்ஸின் செயல்பாட்டு வருவாய் 2.7 சதவீதம் அதிகரித்து ரூ. 6,320 கோடியாக இருந்தது. நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக பல நிறுவனங்களைக் கையகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையில், அம்பூஜா சிமெண்ட்ஸ் லிமிடெட் பங்குகள் 1.01 சதவீதம் சரிந்து, ஒரு பங்கின் விலை ரூ. 426.30 ஆக நிறைவடைந்தது.

Summary

Adani Group firm Ambuja Cements Ltd on Tuesday reported 36.6 per cent decline in consolidated profit .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.