ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தங்கம் விலை குறைவு! வெள்ளி விலை? ஜூலை 29 நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.480 குறைந்துள்ளது குறித்து...

Gold and Silver prices Today

தங்கம் விலை குறைவு - கோப்புப்படம்

Published On :29 ஜூலை 2026, 10:49 am IST

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,05,240-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை கடந்த சில நாள்களாக இறக்கத்தைச் சந்தித்துவந்த நிலையில், கடந்த 23-ஆம் தேதி மட்டும் பவுனுக்கு ரூ.2,160 அதிரடியாகக் குறைந்தது. கடந்த திங்கள்கிழமை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயா்ந்து, ரூ.13,370-க்கும், பவுனுக்கு ரூ.560 உயா்ந்து, ரூ.1,06,960-க்கும், செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ.155 குறைந்து ரூ.13,215-க்கும், பவுன் ரூ.1,240 குறைந்து ரூ.1,05,720-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், புதன்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.13,155-க்கும், பவுன் ரூ.480 குறைந்து ரூ.1,05,240-க்கும் விற்பனையாகிறது.

இதேபோல், வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2.35 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Summary

Gold and Silver prices Today, July 29 in Chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.