ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

3-ம் நாளாக சரிவில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 500 புள்ளிகள் சரிவு; ஆட்டோ, உலோகப் பங்குகள் உயர்வு

இன்றைய (ஜூலை 22) பங்குச்சந்தை வர்த்தகம் பற்றி...

Stock Market today: Sensex down 500 pts, Nifty near 24,000

தேசிய பங்குச் சந்தை (கோப்புப் படம்) - ANI

Published On :22 ஜூலை 2026, 11:43 am IST

இந்திய பங்குச்சந்தையின் சென்செக்ஸ், நிஃப்டி50 குறியீடுகள் தொடர்ந்து 3-வது நாளாக இன்று (ஜூலை 22) சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 77,384.95 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 566.37 புள்ளிகள் குறைந்து 76,907.24 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 148.35 புள்ளிகள் குறைந்து 24,039.35 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அமெரிக்கா - ஈரான் இடையே நிலவும் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்வால் பங்குச்சந்தைகள் சரிவைச் சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.

நிஃப்டி மிட்கேப், நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.59 சதவீதம், 0.92 சதவீதம் சரிந்து வர்த்தகமாகின்றன.

நிஃப்டி50 குறியீட்டில் இன்டர்குளோப் ஏவியேஷன், சிப்லா, ஆக்சிஸ் வங்கி ஆகியவை அதிக சரிவைச் சந்தித்தன.

சென்செக்ஸ் 30 பங்குகளில் மாருதி, டைட்டன், எட்டர்னல், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ட்ரென்ட், எம்&எம் ஆகிய நிறுவனங்கள் மட்டும் நேர்மறையில் வர்த்தகமாகின்றன.

துறைசார் குறியீடுகளில், நிஃப்டி ஆட்டோ, உலோகம், எப்எம்சிஜி குறியீடுகள் மட்டும் உயர்வுடனும் ரியல் எஸ்டேட், ஐடி, பார்மா, பொதுத்துறை வங்கிகள் என இதர குறியீடுகள் அனைத்தும் சரிவையும் சந்தித்து வருகின்றன.

மீண்டும் ஈரான் - அமெரிக்கா இடையேயான போரால் பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 92.07 டாலர் என உயர்ந்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 96.34 ஆக உள்ளது.

Summary

Stock Market today: Sensex down 500 pts, Nifty near 24,000

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.