ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 650 புள்ளிகள் ஏற்றம்; ஐடி, ரியல் எஸ்டேட் பங்குகள் உயர்வு!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...

Stock Market: Sensex rises 600 pts, nifty near 24600

தேசிய பங்குச் சந்தை - ANI

Published On :3 ஆகஸ்ட் 2026, 11:24 am IST

கடந்த வாரம் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்த நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளான இன்றும் (ஆக. 3) பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 78,883.34 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11 மணியளவில் சென்செக்ஸ் 650.14 புள்ளிகள் உயர்ந்து 78,744.78 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 207.45 புள்ளிகள் உயர்ந்து 24,591.05 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

நிஃப்டி50 குறியீட்டில் ஐடிசி, இன்டர்குளோப் ஏவியேஷன் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாகும்.

சென்செக்ஸ் 30 பங்குகளில் பாரதி ஏர்டெல், மாருதி, சன் பார்மா ஆகியவை மட்டும் சரிந்து மற்ற அனைத்தும் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.

நிஃப்டி மிட்கேப், ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 1.16 மற்றும் 1.17 சதவீதம் உயர்ந்து வர்த்தகமாகிறது.

துறைவாரியாக நிஃப்டி மீடியா, பார்மா பங்குகள் மட்டும் சரிந்து வருகின்றன. நிஃப்டி ஐடி, ரியல் எஸ்டேட், பொதுத்துறை வங்கிகள் என மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் உயர்ந்து வருகின்றன.

வர்த்தக நேர தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 95.14 ஆக இருந்தது.

Summary

Stock Market: Sensex rises 600 pts, nifty near 24600

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.