ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஹைப்ரிட் வகை காரில் அதிக மைலேஜ் கொடுக்கும் அர்பன் க்ரூசர் ஹைரைடர்!

டொயோட்டா நிறுவனத்தின் அர்பன் க்ரூசர் ஹைரைடர், ஹைப்ரிட் வகை காரில் அதிகபட்சமாக 28 கி.மீ. மைலேஜ் கொடுப்பது குறித்து...

 Toyota Urban Cruiser Hyryder

அர்பன் க்ரூசர் ஹைரைடர் - படம் / நன்றி - டொயோட்டா

Published On :22 ஜூலை 2026, 4:44 pm IST

டொயோட்டா நிறுவனத்தின் டொயோட்டா அர்பன் க்ரூசர் ஹைரைடர், ஹைப்ரிட் வகை காரில் அதிகபட்சமாக 28 கி.மீ. மைலேஜ் கொடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வலுவான ஹைப்ரிட் என்ஜின் உடைய கார், ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் பிரிவில் லிட்டருக்கு 28 கி.மீ. மைலேஜ் கொடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிஜ உலகப் பயன்பாட்டில் நகர்ப்புறங்களில் 24 கி.மீ. வரை கொடுக்கிறது.

மைல்ட் ஹைப்ரிட் வகை என்ஜின் உடைய கார் 22 முதல் 24 கி.மீ. தூரம் வரை மைலேஜ் கொடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹைப்ரிட் கார்கள் மீதான பயனர்களின் விருப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், தயாரிப்பு நிறுவனங்களும் பயனர்களுக்கு ஏற்ப மைல்ட் மற்றும் ஸ்ட்ராங் ஹைப்ரிட் என இரண்டு வகை என்ஜின் உடைய கார்களை தயாரித்து வருகிறது.

அந்தவகையில், அர்பன் க்ரூசர் ஹைரைடர் மைல்ட் ஹைப்ரிட் என்பது சிறிய மின்சார மோட்டரைக் கொண்டு ஆக்சிலரேஷனுக்கு விசையை அளிக்கிறது. ஸ்ட்ராங் ஹைப்ரிட் என்பது பெரிய பேட்டரியைக் கொண்டு காரை முழுமையாக மின்சார ஆற்றலில் இயக்க வைக்கிறது.

நாட்டுலேயே மலிவு விலையில் கிடைக்கும் வலுவான ஹைப்ரிட் கார் பட்டியலில், மாருதி க்ராண்ட் விட்டாரா முதன்மை இடத்தில் உள்ளது. இதன் தொடக்க விலை ரூ. 10.77 லட்சம்.

என்னும், ப்ராண்ட் வேல்யூ அடிப்படையில், ரூ. 60 ஆயிரம் கூடுதல் விலையை கொண்டுள்ள அர்பன் க்ரூசர் ஹைரைடர் கார் மாடல் அதிகப்படியான பயனர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த காரின் ஒட்டுமொத்த ஆன் ரோட் விலை வரம்பானது ரூ.13.52 லட்சத்தில் தொடங்கி ரூ.25.45 லட்சம் வரை நீள்கிறது. வலுவான ஹைரைடர் எடிஷனின் ஆன் ரோட் விலையானது ரூ. 21.36 லட்சம்.

சிறப்பம்சங்கள்

வெண்டிலேடட் முன்புற இருக்கைகள், பனோரமிக் சன்ரூஃப், ஹெட்-அப் டிஸ்பிளே, 9 இன்ச் தொடுதிரை, இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இதுமட்டுமின்றி வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், ஆம்பியண்ட் லைட்டிங், ரிமோட் ஏசி கன்ட்ரோலுக்காக டொயோட்டா ஐ-கனெக்ட், வெஹைகிள் ட்ராக்கிங் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் கம்பேடிபிளிட்டி ஆகியவை உள்ளன. 273 லிட்டர் பூட்-ஸ்பேஸ் வசதி கொண்டுள்ளது.

ஆண்டி -லாக் ப்ரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், ஹில் ஹோட் அசிஸ்ட், உயர் ரக ட்ரிம்களில் 360 டிகிரி கேமரா, அனைத்து பயணிகளுக்கு 3 பாயிண்ட் சீட் பெல்ட், சீட்பெல்ட் ரிமைண்டர்கள், குழந்தைகளுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கைகள் ஆகியவை அடுக்கப்பட்டுள்ளன.

Summary

more mileage Cheapest Strong Hybrid Toyota Urban Cruiser Hyryder

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.