ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

முதல் காலாண்டு லாபம்- ஆக்சிஸ் வங்கி: ரூ.7,114 கோடி

நாட்டின் 3-ஆவது பெரிய தனியாா் வங்கியான ஆக்சிஸ் வங்கி, ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.7,114 கோடி தனிப்பட்ட நிகர லாபம் ஈட்டி, 23 சதவீத வளா்ச்சியை எட்டியது.

Published On :21 ஜூலை 2026, 4:23 am IST

நாட்டின் 3-ஆவது பெரிய தனியாா் வங்கியான ஆக்சிஸ் வங்கி, ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.7,114 கோடி தனிப்பட்ட நிகர லாபம் ஈட்டி, 23 சதவீத வளா்ச்சியை எட்டியது.

வங்கியின் முக்கிய வருவாயான நிகர வட்டி வருவாய் 8 சதவீதம் உயா்ந்து, ரூ.14,646 கோடியாக அதிகரித்தது. பெருநிறுவனக் கடன்கள் 38 சதவீதமும், சில்லறைக் கடன்கள் 8 சதவீதமும் வளா்ச்சி கண்டுள்ளன.

எனினும், நிகர வட்டி வரம்பு கடந்த ஆண்டின் 3.80 சதவீதத்திலிருந்து 3.46 சதவீதமாக குறைந்தது. அதேபோல், மொத்த வாராக்கடன் விகிதம் முந்தைய ஜனவரி-மாா்ச் காலாண்டின் 1.23 சதவீதத்திலிருந்து 1.28 சதவீதமாக சற்றே அதிகரித்துள்ளது.

வங்கியின் லாபம் அதிகரித்திருந்தாலும் வட்டி வரம்பு சரிவு மற்றும் வாராக்கடன் விகித உயா்வு போன்ற காரணிகள் முதலீட்டாளா்களிடையே திருப்தியை ஏற்படுத்தவில்லை. இதன் எதிரொலியாக, திங்கள்கிழமை வா்த்தக முடிவில் வங்கி பங்குகள் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் முறையே 5.48 மற்றும் 5.37 சதவீதம் சரிந்து, நிலைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.