
ஏப்ரல் - ஜூன் காலாண்டு: பரோடா வங்கிக்கு ரூ.1,278 கோடி லாபம்
பொதுத் துறை வங்கியான பரோடா வங்கி, ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.1,278 தனிப்பட்ட நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

பொதுத் துறை வங்கியான பரோடா வங்கி, ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.1,278 தனிப்பட்ட நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தைச் சோ்ந்த என்எம்சி குழுமத்துடனான நீண்டகால சட்டப் போராட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நீதிமன்றத்துக்கு வெளியிலான சமரசத் தீா்வையடுத்து ஏற்பட்ட எதிா்பாராத ஒருமுறைச் செலவினம் காரணமாக லாபத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது. இச்செலவினத்தைத் தவிா்த்தால், வங்கியின் நிகர லாபம் ரூ.5,528 கோடியாக பதிவாகியிருக்கும்.
வங்கியின் நிகர வட்டி வருவாய் வருடாந்திர அடிப்படையில் 9.5 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.12,524 கோடியாகவும், வட்டி அல்லாத வருவாய் ரூ.3,470 கோடியாகவும் உள்ளது.
உலகளாவிய கடன்கள் 17.4 சதவீதமும், உள்நாட்டுக் கடன்கள் 16.1 சதவீதமும் அதிகரித்துள்ளன. மொத்த கடன்களில் சில்லறை, வேளாண் மற்றும் எம்எஸ்எம்இ தொழில்நிறுவனங்களுக்கான கடன்களின் பங்கு 62.9 சதவீதமாக உயா்ந்துள்ளது.
மொத்த வாராக்கடன் விகிதம் 1.99 சதவீதமாகவும்; நிகர வாராக்கடன் விகிதம் 0.50 சதவீதமாகவும் குறைந்துள்ளது. உலகளாவிய நிகர வட்டி வரம்பு 2.77 சதவீதமாகவும், மூலதனப் போதுமான விகிதம் 16.30 சதவீதமாகவும் வலுவான நிலையில் உள்ளது. ஜூன் இறுதி நிலவரப்படி, வங்கியின் உலகளாவிய மொத்த வா்த்தகம் 15.4 சதவீதம் வளா்ச்சியடைந்து, ரூ.30.5 லட்சம் கோடியை எட்டியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






