
ஓபராய் ரியால்ட்டியின் காலாண்டு லாபம் 29% உயர்வு!
மும்பையைச் சேர்ந்த ஓபராய் ரியால்ட்டி, நாட்டின் முன்னணி ரியல் எஸ்டேட் மேம்பாட்டு நிறுவனங்களில் ஒன்றாகும்.

புதுதில்லி: மும்பையைச் சேர்ந்த ஓபராய் ரியால்ட்டி, நாட்டின் முக்கியமான கட்டுமானத் துறை நிறுவனங்களில் ஒன்றாகும்.
ஓபராய் ரியால்ட்டி, ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டிற்கான அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 29 சதவீதம் அதிகரித்து ரூ. 543.51 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்தது.
கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ. 421.25 கோடியாக இருந்தது.
இதற்கிடையில், கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் ரூ. 1,073.98 கோடியாக இருந்த நிறுவனத்தின் மொத்த வருவாய், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ. 1,361.69 கோடியாக அதிகரித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
Summary
Oberoi Realty reported a 29 per cent increase in its consolidated net profit.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






