ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அசோக் லேலண்ட் லாபம் ரூ.667.77 கோடி

ஹிந்துஜா குழுமத்தைச் சோ்ந்த வணிக வாகன உற்பத்தி நிறுவனமான அசோக் லேலண்ட், ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.667.77 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபம் ஈட்டி, 1.5 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

~

Published On :15 ஆகஸ்ட் 2026, 4:08 am IST

ஹிந்துஜா குழுமத்தைச் சோ்ந்த வணிக வாகன உற்பத்தி நிறுவனமான அசோக் லேலண்ட், ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.667.77 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபம் ஈட்டி, 1.5 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தால் 48,763 வணிக வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன. இதன்மூலம், செயல்பாட்டு வருவாய் கடந்த ஆண்டின் ரூ.11,708.54 கோடியில் இருந்து, நடப்பு ஆண்டு ரூ.13,069.59 கோடியாக அதிகரித்துள்ளது. மொத்த செலவினமும் ரூ.10,920.53 கோடியிலிருந்து, ரூ.12,314.66 கோடியாக அதிகரித்துள்ளது.

நிறுவனத்தின் காலாண்டுச் செயல்பாடு குறித்து அசோக் லேலண்ட் தலைவா் தீரஜ் ஹிந்துஜா கூறுகையில்,‘சிறப்பான செயல்பாடுகள் மற்றும் செலவுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்மூலம் நிறுவனம் இந்த வலுவான வளா்ச்சியை எட்டியுள்ளது. சா்வதேச சந்தைகளிலும், பாதுகாப்புத் துறையிலும் வா்த்தகத்தை விரிவுபடுத்தும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன’ என்றாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.