ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல் காலாண்டு லாபம் இரட்டிப்பு!

ஜே எஸ் டபிள்யூ ஸ்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் இருமடங்கிற்கும் மேலாக அதிகரித்து ரூ. 4,696 கோடியாக உயர்ந்துள்ளது.

JSW Steel

Published On :17 ஜூலை 2026, 9:12 pm IST

புதுதில்லி: வருவாய் அதிகரிப்பு காரணமாக, ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் இருமடங்கிற்கும் மேலாக அதிகரித்து ரூ. 4,696 கோடியாக இருப்பதாக நிறுவனம் இன்று தெரிவித்தது.

கடந்த 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ. 2,209 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்ததாக நிறுவனம் தெரிவித்தது.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நிறுவனத்தின் மொத்த வருவாய், கடந்த ஆண்டு இதே காலாண்டிலிருந்த ரூ. 43,497 கோடியிலிருந்து ரூ. 48,088 கோடியாக உயர்ந்துள்ளது. அதே வேளையில் நிறுவனத்தின் செலவினங்கள் ரூ. 40,325 கோடியிலிருந்து ரூ. 41,830 கோடியாக உயர்ந்துள்ளது.

நிறுவனத்தின் எஃகு உற்பத்தி, கடந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டிலிருந்த 6.38 மில்லியன் டன்னிலிருந்து, நடப்பு நிதியாண்டின் ஜூன் காலாண்டில் 3 சதவீதம் அதிகரித்து 6.59 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தில் ரூ. 16,350 கோடிக்கும் அதிகமான முதலீட்டில், ஆண்டுக்கு 2 மில்லியன் டன் உற்பத்தித் திறன் கொண்ட எஃகு ஆலை அமைக்கும் பணியையும் நிறுவனம் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தகது.

Summary

JSW Steel said its consolidated net profit more than doubled to Rs 4,696 crore in the quarter.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.