டாடா நிறுவனத்தின் பஞ்ச் மாடல் காருக்குப் போட்டியாக புதிய எஸ்யூவி காரை மாருதி சுசூகி நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. இதன் விலையையும் டாடாவுக்கு சவால் விடும் வகையில் ரூ. 5 லட்சம் என நிர்ணயித்துள்ளது.
டாடா நிறுவனத்தின் பஞ்ச், நெக்ஸான் ஆகிய இரு கார்களும் இந்திய பயனர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தியாவில் பரவலாக ஹேட்ச்பேக் கார்கள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது பலரும் எஸ்யூவி கார்களுக்கு மாறியுள்ளனர்.
எஸ்யூவி கார் என்றால் என்ன?
எஸ்யூவி கார் என்பது, இது சாதாரண கார்களைப் போலல்லாமல், தரையிலிருந்து அதிக உயரம் கொண்டதாக (அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ்) இருக்கும். பெரிய டயர்கள் மற்றும் முரட்டுத்தனமான வடிவமைப்பைக் கொண்டவை. இதனால் ஹேட்ச்பேக் கார்களைக் காட்டிலும் எஸ்யூவி கார்களை பலரும் விரும்புகின்றனர்.
இதனை முன்பே உணர்ந்த டாடா நிறுவனம், 2021ஆம் ஆண்டே டாடா பஞ்ச் என்ற எஸ்யூவி காரை அறிமுகம் செய்தது. இந்த காருக்கு கிடைத்த வரவேற்பால் டாடா நிறுவனத்தின் சந்தை மதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து நெக்ஸான் என்ற காரையும் அறிமுகம் செய்தது. இந்த காருக்கும் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. இதனால் மாருதி சுசூகி நிறுவனத்தின் ஹேட்ச்பேக் கார்களின் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டது.
அறிமுகமாகிறது ஹஸ்ட்லர்
தற்போது மாருதி நிறுவனமும் ஹஸ்ட்லர் (Hustler) என்ற மினி எஸ்யூவி காரை அறிமுகம் செய்யவுள்ளது. இதற்கான தயாரிப்புப் பணிகள் தொடங்கி, சோதனை முயற்சிகளிலும் மாருதி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
ஹஸ்ட்லர் என்ற கார் கெய் கார் வகையைச் சேர்ந்தது. ஜப்பானில் இருசக்கர வாகனத்தை விட பெருசாகவும், காரை விடை சிறியதாகவும் கெய் கார்கள் பயன்படுத்தப்படுகின்றன.
டாடா பஞ்ச் காருக்கு போட்டியாக வேகன்ஆர் வடிவத்தைப்போன்று ஹஸ்ட்லர் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. 660 சிசி என்ஜினை மாருதி நிறுவனம் பயன்படுத்தவுள்ளது.
பஞ்ச் காருக்குப் போட்டியாக புதிய ஹஸ்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு போட்டியாக ரூ. 5 - 6 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Maruti to launch a new car priced at ₹5 lakh to compete with Tata
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டாடா சியாரா எலக்ட்ரிக் கார் அறிமுகம் - புகைப்படங்கள்

வாடிக்கையாளா்களுக்காக புதிய ‘ப்ரீபெய்டு’ பராமரிப்புத் திட்டம்: மாருதி சுஸுகி அறிமுகம்

ஒன்பிளஸ், ஐகியூ ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக ஷாவ்மியின் 17டி அறிமுகம்!

ஒரு லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ் தரும் புதிய கார்! அறிமுகம் செய்கிறது மாருதி!
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




