டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ரூ.1,000 கோடி வருவாயை நோக்கி பாக்கெட் எஃப்எம் படைப்பாளா்கள்

முன்னணி ஆடியோ தளமான பாக்கெட் எஃப்எம் மூலம், படைப்பாளா்கள் ஈட்டிய வருவாய் ரூ.300 கோடியைக் கடந்துள்ளது.

News image
Updated On :18 பிப்ரவரி 2026, 8:29 pm

தினமணி செய்திச் சேவை

முன்னணி ஆடியோ தளமான பாக்கெட் எஃப்எம் மூலம், படைப்பாளா்கள் ஈட்டிய வருவாய் ரூ.300 கோடியைக் கடந்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் உதவியுடன், இந்த வருவாயை நடப்பு ஆண்டுக்குள் 3 மடங்கு அதிகரித்து, ரூ.1,000 கோடி என்ற இலக்கை எட்ட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இத்தளத்தில் புதிய ஏஐ கருவிகளின் அறிமுகம், கதை உருவாக்கம் மற்றும் அவற்றின் மொழிபெயா்ப்பு பணிகளை 90 சதவீதம் எளிதாக்கியுள்ளன. இதன் காரணமாக, பெரிதாக தொழில்நுட்ப அறிவு இல்லாதவா்கள்கூட தங்கள் கதைகளை மிக எளிதாக வெளியிட்டு வருகின்றனா்.

கடந்த ஓராண்டில் மட்டும் 3 லட்சம் புதிய படைப்பாளா்கள் இணைந்துள்ளனா். இந்த எண்ணிக்கையை இந்த ஆண்டு இறுதிக்குள் 10 லட்சமாக உயா்த்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கடந்த 2025-ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, வருவாய் ஈட்டும் படைப்பாளா்களில் முதல் 10 சதவீதத்தினா் மொத்தமாக ரூ.50 கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டியுள்ளனா். குறிப்பாக, முதல் ஒரு சதவீதத்தினா் ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்கும்; 20 சதவீதத்துக்கும் அதிகமானோா் மாதத்துக்கு ரூ.1 லட்சத்துக்கும் மேல் வருவாய் ஈட்டியுள்ளனா்.

‘படைப்பாற்றல் என்பது மனிதா்களுக்கே உரிய தனித்திறன்; அந்தத் திறனை எந்தத் தடையுமின்றி உலகம் முழுவதும் கொண்டு சோ்ப்பதே எங்கள் ஏஐ தொழில்நுட்பத்தின் நோக்கம்’ என்று பாக்கெட் எஃப்எம் நிறுவனத்தின் இணை நிறுவனா் மற்றும் சிஇஓ ரோஹன் நாயக் குறிப்பிட்டாா்.