/

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாகக் களமிறங்கும் புதிய எம்ஜி மெஜஸ்டர்!

இந்தியாவில் அறிமுகமான எம்ஜி மெஜஸ்டர் பற்றி..

News image
MG Majestor
Updated On :13 பிப்ரவரி 2026, 12:45 pm

இணையதளச் செய்திப் பிரிவு

எம்ஜி மோட்டார் நிறுவனமானது புதிய மெஜஸ்டர் எஸ்யூவி மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக இந்த மாடலை களத்தில் இறக்கவுள்ளது.

பல்வேறு நாடுகளிலும் வெவ்வேறு பெயர்களில் வெளியான நிலையில் புதிய மெஜஸ்டர் எஸ்யூவி மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது எம்ஜி மோட்டர்.

கடந்த ஜனவரியில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025-ல் இந்த மாடலை காட்சிப்படுத்தியது. கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு எம்ஜி மெஜஸ்டர் மூன்று வரிசை எஸ்யுவியை வெளியிட்டது. தங்களுடைய இந்திய லைன் அப்பில் கிளாஸ்டருக்கு மேலாக புதிய மெஜஸ்டரை நிலைநிறுத்த உள்ளது.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், இதன் டெலிவரியை மே மாதம் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்னதாக ஏப்ரலில் இதனை வாடிக்கையாளர்கள் டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கலாம். முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. ரூ. 41 ஆயிரம் செலுத்தி இந்த எஸ்யூவி காரை வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

சிறப்பம்சங்கள் என்ன?

பவர்ட்ரெயின் ஆப்ஷன், 215 ஹெச்பி பவர் மற்றும் 478 என்.எம்.டார்க் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. 4 சிலிண்டர் இன்ஜின், எம்ஜி கிளாஸ்டரின் உயர்நிலை வேரியன்ட்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. ரேர வீல் டிரைவ் மற்றும் நான்கு வீல் டிரைவ் என இரண்டு விதமான டிரைவ் தேர்வுகளையும் இந்தக் கார் கொண்டுள்ளது.

6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் என இரண்டு இருக்கை தேர்வுகள் உண்டு. 5,046 மிமீ நீளம், 2,106 மிமீ அகலம், 1,876 மிமீ உயரம் மற்றும் 2,950 மிளீ நீள வீல்பேஸுடன் பெரிய எஸ்யூவியாக மெஜஸ்டர் உள்ளது.

அதோடு, பனோரமிக் சன்ரூஃப், பேடில் ஷிப்டர்கள், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றம் ஆட்ரோ ஆண்ட்ராய்டு, 12 ஸ்பீக்கரகள் கொண்ட ஜெபிஎல் ஆடியோ சிஸ்டம், பல்வேறு நிறங்கள் கொண்ட ஆம்பியன்ட் லைட்டிங் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் அமைந்துள்ளன.

எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் ஏப்ரல் மாதத்தில் காரின் விலையை அறிவிக்க உள்ளது. டொயோட்டா ஃபார்ச்சூனர் போட்டியாக இதன் விலை ரூ. 40-45 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, எம்ஜி கிளாஸ்டரின் விலை ரூ. 38.33 லட்சம் முதல் ரூ. 43.16 லட்சம் வரை நிர்ணயிக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.

summary

The new MG Majestor replaces the MG Gloster in the automaker’s lineup, and is all set to challenge the dominance of the Toyota Fortuner in the segment.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.