டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஐஷர் மோட்டார்ஸ் 3வது காலாண்டு லாபம் ரூ.1,420.61 கோடியாக அதிகரிப்பு!

மோட்டார் சைக்கிள்கள் விற்பனையை மேற்கொண்டு வரும் ஐஷர் மோட்டார்ஸ் தனது 3வது காலாண்டு முடிவை இன்று வெளியிட்டுள்ளது.

News image
Updated On :10 பிப்ரவரி 2026, 2:15 pm

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வணிக வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை மேற்கொண்டு வரும் ஐஷர் மோட்டார்ஸ் தனது 3வது காலாண்டு முடிவை இன்று வெளியிட்டுள்ளது.

டிசம்பர் 2025 உடன் முடிவடைந்த 3வது காலாண்டில் வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த லாபம் 21.37% உயர்ந்து ரூ.1,420.61 கோடியாக இருப்பதாக ஐஷர் மோட்டார்ஸ் தெரிவித்தது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த லாபம் ரூ.1,170.5 கோடியாக இருந்தது. அதன் இருசக்கர வாகனப் பிரிவான ராயல் என்ஃபீல்டின் உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ.958 கோடி முதலீட்டை அதன் வாரியம் அங்கீகரித்துள்ளதாக தெரிவித்தது.

நிறுவனத்தின் செயல்பாடுகளிலிருந்து அதன் ஒருங்கிணைந்த மொத்த வருவாய் ரூ.6,114.04 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு, இதே காலத்தில் இது ரூ.4,973.12 கோடியாக இருந்தது. மதிப்பாய்வு செய்யப்பட்ட காலாண்டில், நிறுவனத்தின் மொத்த செலவுகள் ரூ.4,785.69 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த வருடம், இதே காலத்தில் இது ரூ.3,964.59 கோடியாக இருந்தது.

காலாண்டு விற்பனையாக, ராயல் என்ஃபீல்ட் 3,25,773 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில், விற்பனையான 2,69,039 இருசக்கர வாகனங்களை விட இது 21 சதவீதம் அதிகம்.

summary

Eicher Motors Ltd on Tuesday reported a 21.37 per cent rise in consolidated profit after tax to Rs 1,420.61 crore in the third quarter ended December 31, 2025, driven by robust sales.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.