/

பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ் 3வது காலாண்டு இழப்பு ரூ. 34.1 கோடி!

மொத்த லாப வரம்பில் ஏற்பட்ட சுருக்கம் உள்ளிட்டவையால் ரூ.34.10 கோடி நிகர இழப்பை சந்தித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

News image
பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ்
Updated On :9 பிப்ரவரி 2026, 4:59 pm

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட், நிதியாண்டின் செப்டம்பர் வரையான காலாண்டில், மொத்த லாப வரம்பில் ஏற்பட்ட சுருக்கம் உள்ளிட்ட காரணமாக, ரூ.34.10 கோடி நிகர இழப்பை சந்தித்துள்ளதாக நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு 3வது காலாண்டில் நிறுவனம் ரூ. 33.36 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது. அதே வேளையில், செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருவாய், கடந்த ஆண்டு இதே காலாண்டிலிருந்த ரூ.1,289.72 கோடியுடன் ஒப்பிடுகையில், டிசம்பர் காலாண்டில் இது 18.5% சரிந்து ரூ. 1,050.91 கோடியாக உள்ளது.

அதிக லாபம் தரும் பிரிவுகளில், விற்பனை அளவு சரிந்ததால், அதன் மொத்த லாப வரம்பு சரிந்துள்ளதாக தெரிவித்தது. அதே வேளையில், 3வது காலாண்டில் நிறுவனத்தின் மொத்த செலவுகள் 13.62% சரிந்து ரூ.1,085.78 கோடியாக உள்ளது என்றது.

அதன் நுகர்வோர் பொருட்கள் பிரிவிலிருந்து கிடைத்த வருவாய் 3வது காலாண்டில் 25.2% குறைந்து ரூ. 776.81 கோடியாக உள்ளது. மற்ற வருமானத்தையும் உள்ளடக்கிய பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தின் மொத்த வருமானம், டிசம்பர் காலாண்டில் 18.19% சரிந்து ரூ. 1,065.50 கோடியாக உள்ளது.

மும்பை பங்குச் சந்தையில், பஜாஜ் எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் 0.62% சரிந்து ரூ. 408.95ஆக வர்த்தகமானது.

summary

Bajaj Electricals Ltd on Monday reported a consolidated net loss of Rs 34.10 crore for the September quarter of FY26.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.