

சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு (எல்பிஜி) சிலிண்டர் விலை இன்று(பிப். 1) ரூ. 50 உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் அந்நியச் செலாவணி மதிப்பைக் கணக்கில்கொண்டு, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி எரிபொருள் விலையை மாற்றியமைத்து வருகின்றன.
அதன்படி, பிப்ரவரி மாதத்தின் முதல் நாளான இன்று புதிய விலைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
உணவகங்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை கடந்த மாதம் உயர்ந்திருந்த நிலையில், இந்த மாதம் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரை சென்னையில் வணிக சிலிண்டரின் விலை ரூ. 50 உயர்ந்து, புதிய விலையாக ரூ.1,899.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஜூன் மாதத்துக்குப் பின், வணிக சிலிண்டர் விலை தற்போது புதிய உச்சம் அடைந்துள்ளது.
மாற்றமில்லாத வீட்டு உபயோக சிலிண்டர்: பொதுமக்கள் பயன்படுத்தும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டா் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
சென்னையில் இதன் விலை ரூ.868-ஆகவும், தில்லியில் ரூ.853-ஆகவும் நீடிக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையிலும் எவ்வித மாற்றமும் இன்றி அதே விலையிலேயே தொடர்கிறது.
சர்வதேச அளவில் நிலவும் கடும் குளிர்காலத் தேவை காரணமாகவே எரிவாயு விலை உயா்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
summary
In Chennai, the price of commercial LPG cylinders has increased by Rs. 50.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தங்கம் - வெள்ளி விலை மீண்டும் உயர்வு!

மாலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 உயர்வு!

தங்கம் விலை உயர்வு: வெள்ளி விலையில் மாற்றமில்லை!

தங்கம் விலை மாலையில் அதிரடி உயர்வு
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...


