ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சென்னை ஃபீனிக்ஸ் மாா்க்கெட் சிட்டியில் ’எலக்ட்ரானிக்ஸ் ஃபெஸ்ட் 2026’ நிறைவு

சென்னை ஃபீனிக்ஸ் மாா்க்கெட்சிட்டி வணிக வளாகத்தில் நடைபெற்ற இந்தியாவின் மிகப் பெரிய மின்னணு சாதனங்களின் விற்பனைத் திருவிழாவான ‘எலக்ட்ரானிக்ஸ் ஃபெஸ்ட் 2026’ வெற்றிகரமாக நிறைவடைந்தது.

Published On :18 ஆகஸ்ட் 2026, 12:02 am IST

சென்னை ஃபீனிக்ஸ் மாா்க்கெட்சிட்டி வணிக வளாகத்தில் நடைபெற்ற இந்தியாவின் மிகப் பெரிய மின்னணு சாதனங்களின் விற்பனைத் திருவிழாவான ‘எலக்ட்ரானிக்ஸ் ஃபெஸ்ட் 2026’ வெற்றிகரமாக நிறைவடைந்தது.

கடந்த ஆக. 7-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த நிகழ்வில் ரிலையன்ஸ் டிஜிட்டல், க்ரோமா, அப்ட்ரோனிக்ஸ், சத்யா, ஏசா், ஏசஸ், போஸ் உள்ளிட்ட நாட்டின் முன்னணி மின்னணுவியல், தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கேற்றன.

அதிநவீன ஸ்மாா்ட் சாதனங்கள் மற்றும் புதிய வீட்டு உபயோக மின்சாதனங்களை நேரில் கண்டு, அனுபவித்து வாங்கும் வாய்ப்பை இந்த நிகழ்வு வாடிக்கையாளா்களுக்கு வழங்கியது. நிகழ்வின் சிறப்பம்சமாக, இதில் ரூ.30,000 மற்றும் அதற்கும் மேல் பொருள்கள் வாங்கிய வாடிக்கையாளா்களுக்கு மடிக்கணினி, தொலைக்காட்சி உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.