ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தமிழ்நாட்டில் கிரெடிட் கார்டு கடன் நிலுவை ரூ.2.86 லட்சம் கோடி!

தமிழ்நாட்டில் கிரெடிட் கார்டு கடன் ரூ.2.86 லட்சம் கோடி நிலுவையில் உள்ளதாகத் தகவல்.

கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டு - Center-Center-Delhi

Published On :14 ஆகஸ்ட் 2026, 6:37 pm IST

தமிழ்நாட்டில் உள்ள கிரெடிட் கார்டு பயனர்களின் கடன் நிலுவை இந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி ரூ.2.86 லட்சம் கோடி என்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரூ.1.47 லட்சம் கோடியாக இருந்த கிரெடிட் கார்டு கடன் நிலுவை, 2026ல் ரூ.2.86 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.

தனியார் வங்கிகள் வழங்கிய கிரெடிட் கார்டுகளின் கடன் நிலுவை கடந்த 2022ல் 1.46 லட்சம் கோடியாக இருந்து தற்போது ரூ.2.81 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. மேலும், அரசு வங்கிகளின் கடன் தொகை ரூ.1,123 கோடியிலிருந்து ரூ.5,667 கோடியாக உயர்ந்துள்ளது.

தனியார் வங்கிகளில் எச்டிஎஃப்சி வங்கியின் கடன் நிலுவைதான் மிக அதிகம். ரூ.1.12 லட்சம் கோடி. அடுத்த இடத்தில் ஐசிஐசிஐ வங்கி ரூ.54,865 கோடியுடனும், ஆக்ஸிஸ் வங்கி ரூ.49,702 கோடியுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டில் அதிகமானோர் கிரெடிட் கார்டு பயன்படுத்துவதையே இது காட்டுவதாகவும், இதனுடன், பொருளாதார மேலாண்மைத் திறனும் மக்களிடையே அதிகரிக்க வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டுவதாகவும் உள்ளது என்று கூறப்படுகிறது.

Summary

Credit card debt outstanding in TN stands at Rs 2.86 lakh crore

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.