
சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றத்துடன் நிறைவு (ஆக. 6)
பொதுத் துறை நிறுவனப் பங்குகள், எண்ணெய் மற்றும் எரிவாயு துறை பங்குகள் உயர்வுடன் இருந்தன.

கோப்புப் படம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளின் தீவிர கொள்முதல் மற்றும் சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருந்தது காரணமாக, இந்தியப் பங்குச் சந்தையில் வியாழக்கிழமை ஏற்றம் காணப்பட்டது.
இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் கணிசமான உயா்வுடனும், தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி சிறிதளவு உயா்வுடனும் நிறைவடைந்தன.
மேற்காசிய பதற்றத்தைத் தணிக்க மேற்கொள்ளப்பட்டு வரும் ராஜீய முயற்சிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தால், சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 79.52 டாலராக குறைந்தது சந்தைக்கு ஆதரவாக அமைந்தது.
இருப்பினும், அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் ரூ.943.42 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றது மற்றும் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய இறுதி ஏல முறை காரணமாக இரு குறியீடுகளுக்கும் இடையே சற்று மாறுபட்ட போக்கு நிலவியது.
சென்செக்ஸ் 374 புள்ளிகள் உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் வா்த்தகத்தின் இறுதியில், 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் குறியீடு 373.76 புள்ளிகள் (0.48 சதவீதம்) உயா்வுடன், 78,954.76-இல் நிலைபெற்றது.
சென்செக்ஸ் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதிகபட்சமாக 3.43 சதவீதம் உயா்ந்து வா்த்தகமானது. இத்துடன் எஸ்பிஐ (3.02 சதவீதம்), பெல் (2.56 சதவீதம்) உள்பட 11 பங்குகள் ஆதாயம் கண்டன. மாறாக, பவா் கிரிட் (3.99 சதவீதம் சரிவு), டிசிஎஸ், இண்டிகோ உள்பட 16 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 3 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றது.
நிஃப்டி 11 புள்ளிகள் ஏற்றம்: தேசிய பங்குச் சந்தையில் வா்த்தக முடிவில், நிஃப்டி 11.35 புள்ளிகள் (0.05 சதவீதம்) உயா்வுடன், 24,636-இல் நிலைபெற்றது. நிஃப்டி-50 பட்டியலில் 15 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 34 பங்குகள் விலைகுறைந்த பட்டியலிலும் இருந்தன. பஜாஜ் ஃபின்சா்வ் பங்கு மட்டும் மாற்றமின்றி நிலைபெற்றது.
Summary
Stock Market Close Sensex gains PSU banks shine
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







