மும்பை: கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் அதிகரித்து வரும் அரசியல் நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியில் தடையின்றி வெளியேறும் வெளிநாட்டு நிதி உள்ளிட்டவையால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 41 காசுகள் சரிந்து ரூ.94.56ஆக நிறைவுபெற்றது.
நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, விரிவடைவதற்கான வாய்ப்புகள் உள்ளிட்டவையால், ரூபாயின் மதிப்பு ஏற்கனவே கணிசமாகப் பலவீனமடைந்துள்ளதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வெளிநாட்டு நிதி வெளியேற்றம் தொடர்ந்து நீடித்து வருவது ரூபாயின் மதிப்பை மேலும் பாதித்துள்ளதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை, வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள், இந்தியப் பங்குச் சந்தையிலிருந்து 19 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான நிதியைத் திரும்பப் பெற்றுள்ளனர்.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ. 94.35ஆக வர்த்தகத்தைத் தொடங்கியது. பிறகு சரிந்து, வர்த்தக நேரத்தின் இடையே, ரூபாய் மதிப்பு ரூ. 94.58 என்ற குறைந்தபட்ச நிலையைத் எட்டியது. இறுதியில், அதன் முந்தைய நாள் நிறைவு விலையை விட 41 காசுகள் சரிந்து ரூ. 94.56ஆக நிறைவுபெற்றது.
நேற்றயை வர்த்தகத்தில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு காசு உயர்ந்து ரூ. 94.15ஆக வர்த்தகம் நிறைவுபெற்றது குறிப்பிடத்தக்கது.
Summary
The rupee depreciated 41 paise to close at 94.56 against the US dollar on Tuesday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 95.25! 2 காசுகள் சரிவு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 95.23! 39 காசுகள் சரிவு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 93.32! 49 காசுகள் சரிவு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 92.68! 17 காசுகள் சரிவு!
விடியோக்கள்
"நன்றிகெட்ட Congress கட்சி”: விளாசிய DMK ஆர்.எஸ்.பாரதி
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பது குறித்து மாணிக்கம் தாகூர்! | TVK | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு



