இன்றைய வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 49 காசுகள் சரிந்து ரூ.93.32 ஆக நிறைவுபெற்றது.
நிலையற்ற அரசியல் சூழலுக்கு மத்தியில், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டாலரின் வலுவான நிலை ஆகியவற்றால், இன்றைய வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 49 காசுகள் சரிந்து ரூ.93.32 ஆக நிறைவுபெற்றது.
தோல்வியடைந்த ஈரான்-அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தை, ஹோர்முஸ் நீரிணையை திறப்பது குறித்த நிச்சயமற்ற நிலை மற்றும் மேற்கு ஆசியாவில் மீண்டும் ஏற்பட்ட பதற்றம் உள்ளிட்டவை கச்சா எண்ணெய் விலையை அதிகரித்தது. மேலும், முதலீட்டாளர்கள் உள்நாட்டுப் பங்குகளிலிருந்தும் நிதியைத் திரும்பப் பெற விரைந்ததும், ரூபாயின் மீதான அழுத்தம் ஏற்படுத்தியதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், டாலருக்கு நிகாரன இந்திய ரூபாய் மதிப்பு ரூ.93.30ஆக தொடங்கி, பிறகு சரிந்தன. வர்த்தக முடிவில், அதன் முந்தைய இறுதி நாள் நிலையை விட 49 காசுகள் குறைந்து ரூ.93.32 ஆக நிலைபெற்றது.
வெள்ளிக்கிழமை அன்று, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 32 காசுகள் சரிந்து ரூ.92.83 ஆக இருந்தது.
Summary
The rupee depreciated 49 paise to 93.32 against the US dollar in early trade on Monday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 92.68! 17 காசுகள் சரிவு!

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 94.70! 15 காசுகள் உயர்வு!

1 டாலர் - ரூ. 94.05! 29 காசுகள் சரிந்தது!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 35 காசுகள் சரிந்து ரூ. 93.88 ஆக நிறைவு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


