சீனாவைச் சேர்ந்த இ.இஸட்.ஐ நிறுவனம் தயாரிக்கும் ரே 01 மின்சார ஸ்கூட்டர் மலேசியாவில் ஜூன் மாதம் அறிமுகம் ஆகவுள்ளது. மலேசிய ரிங்கிட்டில் இதன் விலை 2,288 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ரூ. 54,000.
நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏற்ற மின்சார இருசக்கர வாகனமாக இ.இஸட்.ஐ ரே 01 வடிவமைக்கப்பட்டுள்ளது.
வெள்ளை, நீலம், சாம்பல், கருப்பு என நான்கு வண்ணங்களில் தயாரிக்கப்படுகின்றன.
32 Ah திறன் உடைய பேட்டரியுடன், 2 கிலோ வாட் மோட்டார் கொடுக்கப்பட்டுள்ளது.
மின்சாரப் பயன்பாடு 72 வோல்ட்.
பேட்டரிக்கு 2 ஆண்டுகள் அல்லது 20,000 கி.மீ. வாரண்டி கொடுக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக மணிக்கு 68 கிலோ மீட்டர் வேகம் செல்லலாம்.
மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டினால் 120 கி.மீ. தூரம் வரை பயணிக்க முடியும்.
பின்புறம் இரட்டை ஸ்பிரிங் சஸ்பென்ஷன், முன்புறம் டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் உள்ளது.
ஹைட்ராலிக் பிரேக் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மூன்று வகையான வேகங்களில் வாகனத்தை இயக்கலாம்.
வாகனத்தின் மொத்த எடை 130 கிலோ.
இருக்கையின் உயரம் 73.5 செ.மீ.
நகர்ப்புறங்களை மையமாக வைத்து இந்த மின்சார இருசக்கர வாகனம் தயாரிக்கப்படுவதாக இ.இஸட்.ஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

4 மணி நேரம் சார்ஜ் செய்தால் 105 கி.மீ. செல்லும் மின்சார சைக்கிள்!

ஒரு முறை சார்ஜ் செய்தால் 142 கி.மீ. பயணம்! ரூ. 44,490க்கு மின்சார ஸ்கூட்டர்!

ரூ. 49,999-க்கு விற்பனையாகும் டிவிஎஸ் மின்சார ஸ்கூட்டர்!

ஹீரோ, ஓலாவுக்குப் போட்டி... ரூ. 1 லட்சத்துக்கு புதிய மின்சார ஸ்கூட்டரை தயாரிக்கும் ஏத்தர்!
வீடியோக்கள்

மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு


