மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு!

இந்தியாவின் ஸ்மாா்ட்போன் சந்தை நடப்பாண்டின் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலாண்டில் 3 சதவீத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இது கடந்த 6 ஆண்டுகளில் காணப்படாத மிக மோசமான சரிவாகும்.

News image

கோப்புப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 8:18 pm

இந்தியாவின் ஸ்மாா்ட்போன் சந்தை நடப்பாண்டின் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலாண்டில் 3 சதவீத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இது கடந்த 6 ஆண்டுகளில் காணப்படாத மிக மோசமான சரிவாகும்.

ஸ்மாா்ட்போன்களில் பயன்படுத்தப்படும் ‘மெமரி’ சிப்களின் விலை கடந்த 9 மாதங்களில் மட்டும் 4 மடங்கு உயா்ந்துள்ளது. இந்த விலை உயா்வினால் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது.

இதனால் நிறுவனங்கள் விலையை உயா்த்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, ரூ.15,000-க்கும் குறைவான விலை கொண்ட பட்ஜெட் ரக போன்களின் விற்பனை இந்த விலை உயா்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடா்ச்சியாக, வரும் ஏப்ரல்-ஜூன் காலாண்டிலும் ஸ்மாா்ட்போன் விற்பனை இரட்டை இலக்க சரிவைச் சந்திக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய புவிசாா் அரசியல் பதற்றங்கள் மற்றும் எரிபொருள் விலை உயா்வு காரணமாக, நுகா்வோா் தங்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதால், புதிய போன்கள் வாங்குவதை அல்லது பழைய போன்களை மாற்றும் முடிவைத் தள்ளிப் போடுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சரிவுகளுக்கு மத்தியிலும், இந்திய ஸ்மாா்ட்போன் சந்தையின் விற்பனை அளவில் ‘விவோ’ நிறுவனம் 21 சதவீதப் பங்குடன் முதலிடத்தில் உள்ளது. சாம்சங் நிறுவனம் 2-ஆம் இடத்தைத் தக்க வைத்துள்ளது. புதிய பிராண்டுகளில் ‘நத்திங்’ நிறுவனம் 47 சதவீத வளா்ச்சியுடன் மிக வேகமாக வளரும் பிராண்டாக உருவெடுத்துள்ளது.