புதுதில்லி: எச்டிபி பைனான்சியல் சர்வீசஸ், மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டிற்கான வரிக்குப் பிந்தைய லாபம் 41.4 சதவீத உயர்ந்து, ரூ. 751 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்துள்ளது.
எச்.டி.எஃப்.சி. வங்கியின், வங்கி சாரா நிதி நிறுவனப் பிரிவான இந்நிறுவனம், 2024-25 நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் ரூ. 531 கோடி நிகர லாபத்தை ஈட்டியிருந்தது.
2025-26 நிதியாண்டைப் பொறுத்தவரை, வரிக்குப் பிந்தைய லாபம் 17 சதவீத வளர்ச்சியுடன் ரூ. 2,544 கோடியை எட்டியது. கடந்த ஆண்டு ஈட்டிய ரூ. 2,176 கோடி லாபத்துடன் ஒப்பிடும் போது இது குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும்.
மார்ச் 31, 2026 நிலவரப்படி, நிறுவனத்தின் மொத்தக் கடன் கையிருப்பு ரூ. 1.18 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருந்தது. இதுவே கடந்த ஆண்டு இருந்த ரூ. 1.07 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில் 10.9 சதவீத வளர்ச்சியாகும். அதே வேளையில், மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் நிகர வட்டி வருமானம் ரூ. 2,399 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு ரூ. 1,973 கோடியுடன் ஒப்பிடும் போது இது 21.6 சதவீதம் அதிகரிப்பு.
மதிப்பாய்வு செய்யப்பட்ட காலாண்டில் நிறுவனத்தின் மொத்த நிகர வருமானம் ரூ. 3,063 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு ரூ. 2,616 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 17.1 சதவீத வளர்ச்சியாகும்.
எச்டிபி பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் பங்குகள், மும்பை பங்குச் சந்தையில் 4.71 சதவீதம் உயர்ந்து, பங்கு ஒன்றுக்கு ரூ. 644.20 என்ற விலையில் வர்த்தகம் நிறைவடைந்தது.
Summary
HDB Financial Services reported 41.4 per cent growth in profit after tax at Rs 751 crore for the quarter.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

மார்ச்சில் உச்சம் தொட்ட மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனை!

டிவிஎஸ் மோட்டார் விற்பனை 25% உயர்வு!

இணைய வழியில் இருவரிடம் ரூ.31 லட்சம் மோசடி: போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



