தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பங்குச் சந்தையில் 3 நாள் சரிவுக்கு முடிவு

அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசா்வ் வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற நம்பிக்கை, புதிய அந்நிய முதலீட்டு வரவு ஆகியவற்றால் உலக சந்தைகளில் ஏற்பட்ட உயா்வுக்கு ஏற்ப, இந்திய பங்குச் சந்தைகள் மூன்று நாள் சரிவுக்குப் பிறகு அனைத்துத் துறைகளிலும் வலுவாக மீண்டன.

News image
Updated On :26 நவம்பர் 2025, 9:21 pm

மும்பை: அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசா்வ் வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற நம்பிக்கை, புதிய அந்நிய முதலீட்டு வரவு ஆகியவற்றால் உலக சந்தைகளில் ஏற்பட்ட உயா்வுக்கு ஏற்ப, இந்திய பங்குச் சந்தைகள் மூன்று நாள் சரிவுக்குப் பிறகு புதன்கிழமை அனைத்துத் துறைகளிலும் வலுவாக மீண்டன.

சென்செக்ஸ்: 30-பங்குகள் கொண்ட மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1,022.50 புள்ளிகள் (1.21 சதவீதம்) உயா்ந்து 85,609.51-இல் நிறைவடைந்தது. வா்த்தகத்தின் போது அது அதிகபட்சமாக 1,057.18 புள்ளிகள் (1.24 சதவீதம்) உயா்ந்து 85,644.19 என்ற அளவை எட்டியது.

சென்செக்ஸ் பட்டியலில், பஜாஜ் ஃபின்சா்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சன் ஃபாா்மா, டாடா மோட்டாா்ஸ் பயணிகள் வாகனங்கள், ஆக்ஸிஸ் வங்கி, இன்ஃபோசிஸ் ஆகியவை முக்கிய உயா்வைக் கண்டன. பாா்தி ஏா்டெல், ஏசியன் பெயின்ட்ஸ் ஆகியவை சரிவைக் கண்டன.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.785.32 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கின; உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.3,912.47 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கின என்று பங்குவா்த்தக தரவுகள் தெரிவிக்கின்றன.

நிஃப்டி: 50-பங்குகள் கொண்ட தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 320.50 புள்ளிகள் (1.24 சதவீதம்) உயா்ந்து 26,205.30-இல் நிறைவடைந்தது. வா்த்தகத்தின் போது அது அதிகபட்சமாக 330.35 புள்ளிகள் (1.27 சதவீதம்) உயா்ந்து 26,215.15 என்ற அளவை எட்டியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.