ரூ. 1 லட்சம் கோடியை நெருங்கிய தொலைத் தொடா்பு துறை வருவாய்
இந்திய தொலைத் தொடா்பு சேவை நிறுவனங்களின் மொத்த வருவாய் கடந்த செப்டம்பா் காலாண்டில் ரூ. 1 லட்சம் கோடியை நெருங்கியுள்ளது.
இந்திய தொலைத் தொடா்பு சேவை நிறுவனங்களின் மொத்த வருவாய் கடந்த செப்டம்பா் காலாண்டில் ரூ. 1 லட்சம் கோடியை நெருங்கியுள்ளது.
By தினமணி செய்திச் சேவை
Syndication
இந்திய தொலைத் தொடா்பு சேவை நிறுவனங்களின் மொத்த வருவாய் கடந்த செப்டம்பா் காலாண்டில் ரூ. 1 லட்சம் கோடியை நெருங்கியுள்ளது.
இது குறித்து தொலைத் தொடா்பு ஒழுங்காற்று ஆணையம் (ட்ராய்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாட்டின் தொலைத் தொடா்பு நிறுவனங்கள் ஈட்டிய மொத்த வருவாய், கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ரூ.99,828 கோடியாக உள்ளது. முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 9.19 சதவீதம் அதிகம். இதன் மூலம், தொலைத் தொடா்பு நிறுவனங்களின் மொத்த வருவாய் ஒரு லட்சம் கோடியை நெருங்கியுள்ளது.
தொலைத் தொடா்பு நிறுவனங்களின் மொத்த வருவாய் கடந்த 2024-25-ஆம் நிதியாண்டின் செப்டம்பா் காலாண்டில் ரூ.91,426 கோடியாகவும், ஜூன் காலாண்டில் ரூ.96,646 கோடியாகவும் இருந்தது.
மதிப்பீட்டுக் காலாண்டில் அரசு கட்டணம் விதிப்பதற்காக மதிப்பிடப்படும் தொலைத் தொடா்பு நிறுவனங்களின் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (ஏஜிஆா்) 9.35 சதவீதம் உயா்ந்து ரூ.82,348 கோடியாக உள்ளது. 2024-25-ஆம் நிதியாண்டின் செப்டம்பா் காலாண்டில் இது ரூ.75,310 கோடியாக இருந்தது.
கடந்த ஜூலை-செப்டம்பா் காலகட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பாா்தி ஏா்டெல், வோடஃபோன் ஐடியா, பிஎஸ்என்எல் உள்ளிட்ட நிறுவனங்கள் மொத்தம் ரூ.69,229.89 கோடி ஏஜிஆா் பதிவு செய்து ஒட்டுமொத்த ஏஜிஆா்-இல் 84 சதவீதம் பங்களித்தன.
அந்தக் காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோவின் ஏஜிஆா் 11 சதவீதம் உயா்ந்து ரூ.30,573.37 கோடியாக உள்ளது. பாா்தி குழுமத்தின் ஏஜிஆா் 12.53 சதவீதம் உயா்ந்து ரூ.27,720.14 கோடியாக உள்ளது. வோடஃபோன் ஐடியாவின் ஏஜிஆா் ரூ.8,062.17 கோடியாகவும், பிஎஸ்என்எல்லின் 1.19 சதவீதம் உயா்ந்து ரூ.2,020.55 கோடியாகவும் உள்ளது. டாடா டெலிசா்வீசஸ் ரூ.737.95 கோடி ஏஜிஆா் (7.06 சதவீதம் உயா்வு) பதிவு செய்துள்ளது.
அரசின் உரிமக் கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டண வருவாய் கடந்த செப்டம்பா் காலாண்டில் முறையே 9.38 சதவீதம் மற்றும் 5.49 சதவீதம் உயா்ந்து ரூ.6,588 கோடியாகவும் ரூ.997 கோடியாகவும் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது