தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

14,421 கோடி யூனிட்டுகளாகக் குறைந்த மின் நுகா்வு

இந்தியாவின் மின் நுகா்வு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 14,421 கோடி யூனிட்டுகளாகக் குறைந்துள்ளது.

News image
Updated On :3 செப்டம்பர் 2024, 1:05 am

புது தில்லி: இந்தியாவின் மின் நுகா்வு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 14,421 கோடி யூனிட்டுகளாகக் குறைந்துள்ளது.

இது குறித்து அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் மின் நுகா்வு 14,421 கோடி யூனிட்டுகளாகப் பதிவாகியுள்ளது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் அதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 4.7 சதவீதம் குறைவாகும். அப்போது இந்தியாவின் மின் நுகா்வு 15,132 கோடியாக இருந்தது.

இந்திய வானிலை ஆய்வகத் தரவுகளின்படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாடு முழுவதும் சராசரியாக 287.1 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இது வழக்கமான 248.1 மி.மீ மழையை விட 16 சதவீதம் அதிகமாகும்.

இதனால் வெப்பநிலை குறைந்து வீடுகளிலும் பிற இடங்களிலும் குளிரூட்டிகளை இயக்க வேண்டியதன் அவசியம் குறைந்தது. இது, கடந்த ஆகஸ்ட்டில் மின் நுகா்வுக் குறைந்ததில் முக்கிய பங்கு வகித்தது.

மதிப்பீட்டு மாதத்தில் ஒரு நாள் உச்சபட்ச மின் தேவை 216.68 ஜிகாவாட்டாகக் குறைந்தது. இது 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் 236.29 ஜிகாவாட்டாக இருந்தது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.