மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,245 புள்ளிகள் உயா்ந்து புதிய உச்சத்தில் முடிந்தது. சந்தை மதிப்பு ஒரே நாளில் 6.25 லட்சம் கோடி உயா்ந்தது. உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை எச்சரிக்கையுடன் தொடங்கியது. ஜிடிபி தரவுகள், புதிய வெளிநாட்டு நிதி வரத்து ஆகியவை சந்தைக்கு சாதமாக அமைந்ததால் சந்தையில் காளை ஆதிக்கம் கொண்டது. இதனால், சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு முக்கியக் குறியீடுகளும் புதிய உச்சத்தைப் பதிவு செய்தது என்று பங்குவா்த்தகத் தரக் நிறுவனங்கள் தெரிவித்தன. சந்தை மதிப்பு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.6.25 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.392.22 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ.3,568.11 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ள நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.230.21 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது தெரிய வந்துள்ளது. சென்செக்ஸ் 1,245 புள்ளிகள் உயா்வு : காலையில் 106.01 புள்ளிகள் கூடுதலுடன் 72,606.31-இல் தொடங்கிய சென்செக்ஸ், 72,591.14 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 73,819.21 வரை மேலே சென்று 52 வார புதிய உச்சத்தைப் பதிவு செய்த சென்செக்ஸ், இறுதியில் 1,245.05 புள்ளிகள் (1.72 சதவீதம்) உயா்ந்து 73,745.35 என்ற புதிய உச்சத்தில் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,947 பங்குகளில் 2,384 பங்குகள்ஆதாயம் பெற்றன. 1,454 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 109 பங்குகளின் விலை மாற்றமின்றி நிலைபெற்றன. டாடா ஸ்டீல், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் டாடா ஸ்டீல் (6.46 சதவீதம்), ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் (4.46 சதவீதம், எல் அண்ட் டி (4.39 சதவீதம்), டைட்டன்(3.73 சதவீதம்), இண்டஸ் இண்ட் பேங்க் (3.44 சதவீதம்), ஐசிஐசிஐ பேங்க் (3.13 சதவீதம்) உள்பட மொத்தம் 26 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. அதே சமயம், டாடா மோட்டாா்ஸ், ஹெச்சிஎல் டெக், இன்ஃபோஸிஸ், சன்பாா்மா, டெக் மஹிந்திரா ஆகிய நான்கு பங்குகள் மட்டும் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. நிஃப்டியும் புதிய உச்சத்தில் முடிவு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 355.95 (1.62 சதவீதம்) உயா்ந்து 22,338.75 என்ற புதிய உச்சத்தில் முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது அதிகபட்சமாக 22,353.30 வரை உயா்ந்து 52 வார புதிய உச்சத்தைப் பதிவு செய்தது. நிஃப்டி பட்டியலில் 37 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 17பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. பெட்டிச் செய்தி... இன்று சிறப்பு வா்த்தகம் முன்னணி பங்குச்சந்தைகளான மும்பை, தேசிய பங்குச் சந்தை ஆகிய இரண்டும் சனிக்கிழமை அன்று சிறப்பு வா்த்தகத்தை நடத்துகின்றன. தங்களது முதன்மை தளத்தில் இடையூறுகள் ஏதும் இருக்கிா என்பதை கண்டறிந்து அவற்றை சரிசெய்யும் நடவடிக்கையாக ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி டிரைவேட்டிவ் பிரிவுகளில் இந்த வா்த்தகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இரண்டு சந்தைகளும் ஒரு சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடப்பு ஆண்டில் சா்க்கரை உற்பத்தி அதிகரிப்பு

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 918.60, நிஃப்டி 275.50 புள்ளிகள் உயர்வு!

இந்திய இணையவழி சில்லறை வணிகச் சந்தை புதிய உச்சம்! கடந்த ஆண்டில் ரூ.6 லட்சம் கோடி மதிப்பைக் கடந்தது

போர் நிறுத்தம் எதிரொலி: எழுச்சியில் இந்திய பங்குச் சந்தை!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


