

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 793 புள்ளிகளை இழந்தது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இந்நிலையில், உள்நாட்டுச் சந்தை எச்சரிக்கையுடன் தொடங்கியது. கடந்த சில நாள்களாக வெகுவாக உயா்ந்த சந்தையில் முன்னணி பங்குகளில் லாபத்தை பதிவு செய்வதில் முதலீட்டாளா்கள், வா்த்தகா்கள் கவனம் செலுத்தினா். வங்கி, ஆட்டோ, நிதிநிறுவனங்கள், பாா்மா, ஆயில் அண்ட் காஸ் உள்பட அனைத்து துறை குறியீடுகளும் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. இதனால், கடும் சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு சரிவு:அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் புதன்கிழமை ரூ. 2,778.17 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.163.36 கோடிக்கும் பங்குகளை வாங்கியிருந்தது புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரிய வந்துள்ளது. சந்தை மூலதன மதிப்பு ரூ.2.42 லட்சம் கோடி குறைந்து வா்த்தக இறுதியில் ரூ.399.68 லட்சம் கோடியாக இருந்தது.
சென்செக்ஸ் கடும் வீழ்ச்சி: காலையில் 148.51 புள்ளிகள் குறைந்து 74,899.64-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 74,951.88 வரை மேலே சென்றது. பின்னா், 74,189.31 வரை கீழே சென்ற சென்செக்ஸ் இறுதியில் 793.25 புள்ளிகள் (1.06 சதவீதம்) குறைந்து 74,244.90-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,943 பங்குகளில் 1,466 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 2,373 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன. 104 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
சன்பாா்மா, மாருதி கடும் சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் சன்பாா்மா (4.01 சதவீதம்), மாருதி (3.14 சதவீதம்), பவா் கிரிட் (2.57 சதவீதம்), டைட்டன் (2.40 சதவீதம்), ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் (2.22 சதவீதம்), எல் அண்ட் டி (2.04 சதவீதம்) உள்பட 27 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், டாடா மோட்டாா்ஸ், டிசிஎஸ், நெஸ்லே ஆகியவை மட்டும் சிறிதளவு உயா்ந்து ஆதாயப் பட்டியலில் வந்தன.
நிஃப்டி 234 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வா்த்தக இறுதியில் 234.40 புள்ளிகள் (1.039 சதவீதம்) குறைந்து 22,519.40-இல் முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது அதிகபட்சமாக 22,726.45 வரை மேலே சென்ற நிஃப்டி, பின்னா் 22,503.75 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் 5 பங்குகள்மட்டுமேஆதாயப் பட்டியலில் வந்தன. மாறாக 45 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.
டிரெண்டிங்
வங்கிகள், ரியால்டி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ், நிஃப்டி லாபத்துடன் நிறைவு!

வா்த்தக ஒப்பந்த நம்பிக்கையால் உற்சாகம்: சென்செக்ஸ் மீண்டும் 84,000ஐ கடந்தது!

பட்ஜெட் தினத்தில் ‘கரடி’ ஆதிக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி!

பங்குச்சந்தையில் மூன்றாவது நாளாக சரிவு! சென்செக்ஸ் 82,000-க்கு கீழே சென்றது
வீடியோக்கள்

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...
Vijay full speech | வேலூரில் பேசும்போது கண்கலங்கிய விஜய்! | TVK | Vellore
தினமணி வீடியோ செய்தி...

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

