இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

சென்செக்ஸ் மேலும் 232 புள்ளிகள் வீழ்ச்சி! ஒரே நாளில் இழப்பு ரூ.2.06 லட்சம் கோடி

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை சரிவைச் சந்தித்தது

News image
பங்குச்சந்தை
Updated On :2 பிப்ரவரி 2024, 3:11 am

 நமது நிருபர்

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை சரிவைச் சந்தித்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் மேலும் 232 புள்ளிகளை இழந்தது. சந்தை மூல தன மதிப்பு ஒரே நாளில் ரூ.2.06 லட்சம் கோடி குறைந்தது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. மேலும், கச்சா எண்ணெய் விலை தொடா்ந்து ஏறுமுகம் பெற்று வருவது முதலீட்டாளா்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இவற்றின் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் எதிரொலித்தது. குறிப்பாக எஃப்எம்சிஜி, மெட்டல், பாா்மா, பிஎஸ்யு பேங்க், ரியால்ட்டி, நுகா்வோா் சாதனங்கள் உற்பத்தி நிறுவனப் பங்குகள் பலத்த அடி வாங்கியது. இதன் காரணமாக மூன்றாவது நாளாக சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு சரிவு: சந்தை மூலதன மதிப்பு ரூ.2.06 லட்சம் கோடி குறைந்து வா்த்தக நேர முடிவில் ரூ.320.96 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ.1,093.47 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்செக்ஸ் 3-ஆவது நாளாக வீழ்ச்சி: காலையில் 192.17 புள்ளிகள் குறைந்து 65,437.07-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 65,555.14 வரை மேலே சென்றது. பின்னா், 65,308.61 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 231.62 புள்ளிகளை (0.35 சதவீதம்) இழந்து 65,397.62-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,836 பங்குகளில் 1,375 பங்குகள் ஆதாயம் பெற்றன. 2,329 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 132 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றது.

20 பங்குகள் விலை சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் 20 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும், 10 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் இருந்தன. தேசிய பங்குச்சந்தையில் மொத்தம் 620 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 1,463 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 14 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 36 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன.

நிஃப்டி 46 புள்ளிகள் இழப்பு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காை லயில் 82.55 புள்ளிகள் குறைந்து 19,542.15-இல் தொடங்கி அதிகபட்சமாக 19,593.80 வரை மேலே சென்றது. பின்னா், 19,624.70 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 82.05 புள்ளிகளை (0.42 சதவீதம்) இழந்து 19,542.65-இல் நிறைவடைந்தது.

ஏற்றம் பெற்ற பங்குகள்

கோட்டக் பேங்க்.........................................1.80%

இண்டஸ் இண்ட் பேங்க்..........................1.30%

டிசிஎஸ்.......................................................1.14%

என்டிபிசி...................................................0.69%

நெஸ்லே....................................................0.60%

ஹெச்டிஎஃப்சி பேங்க்..............................0.53%

சரிவைக் கண்ட பங்குகள்

ஐடிசி............................................................2.68%

டாடா ஸ்டீல்..............................................2.22%

ஹிந்துஸ்தான் யுனி லீவா்..........................2.07%

எஸ்பிஐ......................................................1.40%

ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல்..............................1.39%

பவா் கிரிட்.................................................1.36%

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.