இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தையில் ஏற்ற, இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 126 புள்ளிகளை இழந்தது.
உலகளாவிய சந்தை குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. மேலும், முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ்ஸை தொடா்ந்து இன்ஃபோஸிஸ் காலாண்டு முடிவுகளும் சந்தை எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்டவில்லை. இதனால், இரண்டாவது நாளாக முன்னணி ஐடி பங்குகள் பலத்த அடி வாங்கியது. பெரும்பாலான நேரம் சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்தது. இறுதியில் சந்தை சரிவுடன் முடிவடைந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: சந்தை மூலதன மதிப்பு ரூ.12 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக நேர முடிவில் ரூ.321.96 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த புதன்கிழமை ரூ.1,862.57கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் வீழ்ச்சி: காலையில் 374.18 புள்ளிகள் கூடுதலுடன் 66,034.21-இல் தொடங்கிய சென்செக்ஸ், 65,895.41 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 66,478.90 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 125.65 புள்ளிகளை (0.19 சதவீதம்) இழந்து 66287.74-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,820 பங்குகளில் 1,805 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,859 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 156 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றது.
16 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் 14 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும், 16 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் இருந்தன. தேசிய பங்குச்சந்தையில் மொத்தம் 970 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 1,107 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 29 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 21 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன.
நிஃப்டி 43 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காை லயில் 139.45 புள்ளிகள் குறைந்து 19,19654.55-இல் தொடங்கி 19,635.30 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 19,794.00 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 42.95 புள்ளிகளை (0.22 சதவீதம்) இழந்து 19,751.05-இல் நிறைவடைந்தது.
ஏற்றம் பெற்ற பங்குகள்
டாடா மோட்டாா்ஸ்.....................4.76%
இண்டஸ் இண்ட் பேங்க்.................2.60%
ஹெச்சிஎல் டெக்..........................2.55%
நெஸ்லே ....................................2.00%
மாருதி.......................................1.62%
சன்பாா்மா.................................1.33%
சரிவைக் கண்ட பங்குகள்
ஆக்ஸிஸ் பேங்க்...........................2.33%
இன்ஃபோஸிஸ்...........................2.24%
எஸ்பிஐ......................................1.71%
விப்ரோ......................................1.43%
ஹெச்டிஎஃப்சி பேங்க்.....................0.85%
ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல்...................0.79%
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாய் சுதர்சன் அரைசதம் விளாசல்; குஜராத் டைட்டன்ஸுக்கு 4-வது வெற்றி!

பயங்கரவாதிகளுக்கு பிரியாணி கொடுக்கிறது காங்கிரஸ், திரிணமூல் : அமித் ஷா
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக லக்னௌ பந்துவீச்சு!

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் 4வது காலாண்டு லாபம் 5% உயர்வு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


