பங்குச்சந்தை இரண்டாவது நாளாக புதன்கிழமையும் நேர்மறையாக முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 195 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி
40 புள்ளிகளும் உயர்ந்து நிலைபெற்றன. வர்த்தகத்தின் போது, சென்செக்ஸ் முந்தைய சாதனை அளவான 63,583.07-ஐ முறியடித்து 63,588.31 வரை உயர்ந்து புதிய சாதனை அளவைப் பதிவு செய்தது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நேர்மறையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தையும் ஏறுமுகம் பெற்றது. குறிப்பாக மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ், ஹெச்டிஎஃப்சி இரட்டை நிறுவனப் பங்குகள் வெகுவாக உயர்ந்து சந்தை வலுப்பெற உதவியாக இருந்தன. மேலும், ஐரோப்பிய சந்தையில் வர்த்தகம் உற்சாகம் பெற்றது. இது முதலீட்டாளர்களுக்கு புதிய உத்வேகத்தை அளித்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. நிதிநிறுவனங்கள், பிஎஸ்யு பேங்க், மீடியா, ஐடி பங்குகளுக்கு வரவேற்பு இருந்தது. அதே சமயம், மெட்டல், எஃப்எம்சிஜி, ரியால்ட்டி பங்குகள் விற்பனையை எதிர்கொண்டன.
சந்தை மதிப்பு உயர்வு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.86 ஆயிரம் கோடி உயர்ந்து வர்த்தக நேர முடிவில் ரூ.294.37 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) செவ்வாய்க்கிழமை ரூ.1,942.62 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் புதிய உச்சம்: சென்செக்ஸ் காலையில் 139.76 புள்ளிகள் கூடுதலுடன் 63,467.46-இல் தொடங்கி அதிகபட்சமாக 63,315.62 வரை உயர்ந்து 52 வார புதிய சாதனை அளவைப் பதிவு செய்தது. பின்னர், 63,315.62 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 195.45 புள்ளிகள் உயர்ந்து 63,523.15-இல் முடிவடைந்தது.
17 பங்குகள் விலை சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் 13 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 17 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 950 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும்,
1,100 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 50 முன்னணி நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 26 பங்குகள்
ஆதாயப் பட்டியலிலும்,
24 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன.
ஏற்றம் பெற்ற பங்குகள்
பவர்கிரிட் 3.68%
ஹெச்டிஎஃப்சி வங்கி 1.70%
ஹெச்டிஎஃப்சி 1.66%
டெக் மஹிந்திரா 1.33%
டிசிஎஸ் 0.93%
விப்ரோ 0.78%
சரிவைக் கண்ட பங்குகள்
எம் அண்ட் எம் 1.59%
ஐடிசி 1.29%
ஆக்ஸிஸ் வங்கி 0.88%
இண்ட்ஸ்இண்ட் வங்கி 0.87%
பஜாஜ் ஃபைனான்ஸ் 0.62%
மாருதி 0.62%
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சவரனுக்கு ரூ. 800 உயர்ந்த தங்கம்: வெள்ளி?

சல்மான் கான் - நயன்தாரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னையில் அதிநவீன வழிகாட்டி பலகைகள்! வாகன ஓட்டிகளுக்கு ஜாக்பாட்!!

வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப 14,508 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


