மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

சென்செக்ஸ், நிஃப்டி மீண்டும் வரலாற்று உச்சம்

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் எழுச்சி தொடர்ந்தது.

News image
Updated On :22 ஜூலை 2025, 9:57 am

தினமணி

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் எழுச்சி தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி ஆகிய இரண்டும் புதிய வரலாற்றுச் சாதனை அளவைப் பதிவு செய்துள்ளன.
 இறுதியில் சென்செக்ஸ் 274 புள்ளிகளும், நிஃப்டி 66 புள்ளிகளும் உயர்ந்து புதிய சாதனை அளவில் நிலைபெற்றன. பங்குச் சந்தை தொடர்ந்து 4-ஆவது நாளாக முன்னேற்றம் கண்டது.
 அமெரிக்கா, ஐரோப்பா உள்பட உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இந்த நிலையில், உள்நாட்டுச் சந்தையில் பங்குகளை வாங்குவதற்கு நல்ல ஆதரவு இருந்தது. மேலும், இந்திய சந்தைகளில் வெளிநாட்டு முதலீடு தொடர்வதும், பொருளதார தரவுகள் நேர்மறையாக இருந்ததும் முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தை அளித்தன. ஐடி, பிஎஸ்யு பேங்க், நிதி நிறுவனப் பங்குகளுக்கு ஆதரவு கிடைத்தது. அதே சமயம், ஆட்டோ, ஆயில் அண்ட் காஸ், ரியால்ட்டி பங்குகள் விற்பனையை எதிர்கொண்டன என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு செவ்வாய்க்கிழமை ரூ.36 ஆயிரம் கோடி உயர்ந்து வர்த்தக நேர முடிவில் ரூ.298.58 லட்சம் கோடியாக இருந்தது
 சென்செக்ஸ் மேலும் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 298.80 புள்ளிகள் கூடுதலுடன் 65,503.85-இல் தொடங்கி 65,171.06 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 65,672.97 வரை உயர்ந்து புதிய வரலாற்றுச் சாதனை அளவை பதிவு செய்த சென்செக்ஸ், இறுதியில் 274 புள்ளிகள் கூடுதலுடன் 65,479.05-இல் முடிவடைந்தது.
 19 பங்குகள் விலை உயர்வு: சென்செக்ஸ் பட்டியலில் 19 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 11 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 848 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,216 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. மேலும், 50 முன்னணி நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 29 பங்குகள்ஆதாயப் பட்டியலிலும், 21 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன.
 ஜூனில் "எஃப்ஐஐ' அதிக முதலீடு
 அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் ஜூன் மாதத்தில் மட்டும் மொத்தம் ரூ.47,148 கோடி அளவுக்கு முதலீடுகளை மேற்கொண்டுள்ளனர். இது கடந்த 10 மாதங்களில் இல்லாத அதிகபட்ச வரவு என்று சந்தை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் திங்கள்கிழமை ரூ.1,995.92 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
 ஏற்றம் பெற்ற பங்குகள்
 பஜாஜ் ஃபைனான்ஸ் 7.17%
 பஜாஜ் ஃபின்சர்வ் 5.76%
 டெக் மஹிந்திரா 2.39%
 சன்ஃபார்மா 1.61%
 என்டிபிசி 1.54%
 டைட்டன் 1.21%
 சரிவைக் கண்ட பங்குகள்
 பார்தி ஏர்டெல் 1.54%
 ஆக்சிஸ் வங்கி 1.18%
 ரிலையன்ஸ் 1.03%
 இண்டஸ்இண்ட் வங்கி 0.89%
 அல்ட்ராடெக் சிமென்ட் 0.59%
 டாடா ஸ்டீல் 0.57%
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.