மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 149 புள்ளிகள் உயர்வு

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச்சந்தை சரிந்து மீண்டது.  இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 149 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது.

News image
Updated On :9 ஆகஸ்ட் 2023, 10:13 pm


இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச்சந்தை சரிந்து மீண்டது.  இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 149 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது.

மத்திய ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை முடிவு வியாழக்கிழமை வெளியாகவுள்ளது.  அமெரிக்காவின் பணவீக்கத் தரவுகள் வரவுள்ளன. இவற்றைக் கருத்தில் கொண்டு பெரும்பாலான நேரம் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.  தொடக்கத்தில் சரிவைச் சந்தித்தாலும், வர்த்தக நேரம் முடியும் தறுவாயில் மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ், ஐடிசி, எம் அண்ட் எம் உள்ளிட்ட முன்னணி பங்குகளுக்கு கிடைத்த ஆதரவால் சந்தை எழுச்சி பெற்றது. குறிப்பாக ஐரோப்பிய சந்தை நேர்மறையாகத் தொடங்கியதும் அதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் எதிரொலித்தது என்று  பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு உயர்வு: சந்தை மூலதன மதிப்பு ரூ.94 ஆயிரம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.306.30 லட்சம் கோடியாக இருந்தது.  இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் செவ்வாய்க்கிழமை ரூ.711.34  கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்செக்ஸ் முன்னேற்றம்: காலையில் 35.54 புள்ளிகள் குறைந்து  65,810.96இல் தொடங்கிய சென்செக்ஸ், 65,444.38 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 66,066.01 வரை மேலே சென்ற  சென்செக்ஸ்,  இறுதியில் 149.31  புள்ளிகள் (0.23 சதவீதம்) உயர்ந்து 65,995.81இல் முடிவடைந்தது.  

18 பங்குகள் விலை உயர்வு: சென்செக்ஸ் பட்டியலில் 18 பங்குகள் ஆதாயம் பெற்றன. 12 பங்குகள்  வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. தேசிய பங்குச்சந்தையில் மொத்தம் 1,147 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன.

908 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 50 முன்னணி நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 32 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 18 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

நிஃப்டி 62 புள்ளிகள் ஏற்றம்: தேசிய பங்குச் சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி, காலையில் 7.95 புள்ளிகள் கூடுதலுடன்19,578.80-இல் தொடங்கி, 19,467.50 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 19,645.50  வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 61.70 புள்ளிகள் (0.32 சதவீதம்)  உயர்ந்து 19,632.55இல்  நிறைவடைந்தது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.