நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

சென்செக்ஸ் 635 புள்ளிகள் வீழ்ச்சி: ஒரே நாளில் ரூ.4.45 லட்சம் கோடி இழப்பு

இரண்டாவது நாளாக பங்குச் சந்தை புதன்கிழமையும் எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 635 புள்ளிகளை இழந்தது.

News image
Updated On :22 ஜூலை 2025, 9:57 am

தினமணி

இரண்டாவது நாளாக பங்குச் சந்தை புதன்கிழமையும் எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 635 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 186.20 புள்ளிகள் (1.01 சதவீதம்) குறைந்து 18,199.10-இல் நிலைபெற்றது.
 அமெரிக்க பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை நேர்மறையாக முடிந்திருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை எழுச்சியுடன் தொடங்கியது. ஆசியாவில் சியோல், டோக்கியோ, ஷாங்காய் சந்தைகளில் வர்த்தகம் எதிர்மறையாக இருந்தன. மேலும், சீனா உள்பட சில நாடுகளில் கரோனா தாக்கம் மீண்டும் விஸ்வரூபம் எடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. இதனால், காலையில் பெற்ற லாபத்தில் பெரும்பகுதியை இழக்க நேரிட்டது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 சென்செக்ஸ் கடும் சரிவு: காலையில் 291.42 புள்ளிகள் கூடுதலுடன் 61,993.71-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 62,006.46 வரை கீழே மேலே சென்றது. பின்னர், 60,938.38 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 635.05 புள்ளிகள் (1.03 சதவீதம்) குறைந்து 61,067.24-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 7 பங்குகள் மட்டுமே விலையுயர்ந்த பட்டியலில் வந்தன. 23 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.
 சன்பார்மா முன்னேற்றம்: பிரபல மருந்து உற்பத்தி நிறுவனமான சன்பார்மா 1.67 சதவீதம், ஹெச்சிஎல் டெக் 1.01 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, டெக் மஹிந்திரா, டிசிஎஸ், நெஸ்லே, விப்ரோ, இன்ஃபோஸிஸ் உள்ளிட்டவை சிறிதளவு உயர்ந்து விலையுயர்ந்த பட்டியலில் வந்தன.
 இண்டஸ் இண்ட பேங்க் சரிவு: அதே சமயம், பிரபல தனியார் வங்கியான இண்டஸ் இண்ட் பேங்க் 2.28 சதவீதம், மாருதி சுஸுகி 2.04 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், அல்ட்ûரா டெக் சிமெண்ட், பஜாஜ் ஃபின் சர்வ், ஐசிஐசிஐ பேங்க், டாடா மோட்டார்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், எஸ்பிஐ, பஜாஜ் ஃபைனான்ஸ், பார்தி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி, ஐடிசி, ரிலையன்ஸ், டாடா ஸ்டீல் உள்ளிட்டவை 1.40 முதல் 2 சதவீதம் வரை குறைந்தன.
 சந்தை மதிப்பு சரிவு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.4.45 லட்சம் கோடி குறைந்து வர்த்தக முடிவில் ரூ.282.95 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) செவ்வாய்க்கிழமை ரூ.455.94 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.