குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பொருட்களை ஏற்றுமதி செய்வதை மேலும் ஊக்குவிப்பதற்காக எம்எஸ்எம்இ எக்ஸ்போர்ட் புரமோஷன் செல் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பாக இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிக வேலை வாய்ப்பு வழங்கும் துறையாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை விளங்குகிறது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் சார்பாக தற்போது 1,47,390.08 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதி வணிகம் நடைபெற்று வருகிறது. நாட்டின் மொத்த ஏற்றுமதியில் இத்துறை தொழில் நிறுவனங்கள் சார்பாக 2017-2018 ஆண்டில் செய்யப்பட்ட ஏற்றுமதி 48.56 சதவீதமாகும்.
அதனால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை உலக பொருளாதாரத்திற்கு தங்களுடைய பங்களிப்பை அளிக்கச் செய்ய அவர்களுடைய பொருட்களை ஏற்றுமதி செய்யவும், ஏற்கனவே செய்து வரும் ஏற்றுமதியை மேலும் ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு எம்எஸ்எம்இ எக்ஸ்போர்ட் ப்ரமோஷன் செல் என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் 2020-ஆம் ஆண்டில் இந்த தொழில் நிறுவனங்கள் மூலம் 100 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்வது. ஏற்றுமதிக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை தயார்படுத்துவது. ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்வதற்காக இத்தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளை மேம்படுத்தி ஏற்றுமதிக்கு தேவையான உதவிகளை செய்வது உள்ளிட்டவை முக்கிய நோக்கமாக கொண்டு எம்எஸ்எம்இ எக்ஸ்போர்ட் ப்ரமோஷன் செல் அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி செய்ய நினைக்கும் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான ஆலோசனைகள், உதவிகள், மானியங்களை வழங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடும்பத்துடன் வாக்களித்த நடிகை ரம்யா பாண்டியன்!
தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


