சென்னை: உலகப்புகழ் பெற்ற மோட்டோராலா நிறுவனம் இந்தியாவில் முதன்முறையாக தனது மடக்கும் வகையிலான ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது.
செல்போன் தயாரிப்பில் ஆரம்பம் தொட்டு புகழ்பெற்ற நிறுவனங்களில் மோட்டோராலாவும் ஒன்று. தற்போது செல்போன் மற்றும் கணினி தயாரிப்பில் ஈடுபட்டு வரும் லெனோவா நிறுவனம் அதனை வாங்கி விட்டது. மோட்டோராலா நிறுவனமானது உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்த 'மோட்டோ ரேஸர்' என்று பெயரிடப்பட்ட, தனது மடக்கும் வகையிலான ஸ்மார்ட்போனை கடந்த நவமபர் மாதம் 14-ஆம் தேதியன்று அமெரிக்காவில் வெளியிட்டது. அமெரிக்க மதிப்பில் 1500 டாலர் (ரூ. 1, 06, 366) விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்த இந்த ஸ்மார்ட் போன், வரும் ஜனவரி மாத இறுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்த போனின் சிறப்பம்சங்களாவான:
ஆக்ட்டா கோர் குவால்காம் ஸ்நாப்ட்ராகன் 710 எஸ் ஓ சி ப்ராசஸர் , 6 ஜிபி ராம், 16 மெகாபிக்ஸல் அளவு கொண்ட முதன்மை கேமரா, 5 மெகாபிக்ஸல் அளவு கொண்ட இரண்டாம் நிலை கேமரா, 6.2 பிக்சல் அளவுகொண்ட முதன்மை ஹெச்.டி மற்றும் ஓஎல்ஈடி டிஸ்பிளே. அதேசமயம் இரண்டாம் நிலை டிஸ்ப்ளேவானது 2.7 இன்ச் அளவும் 600 X 800 பிக்சலும் கொண்டுள்ளது.
இந்த போனானது சாதாரண மற்றும் மடக்கப்பட்ட நிலையிலும் செயல்படும் விதமான பிங்கர் சென்சாரையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆண்ட்ராய்ட் 9 பை ஓஎஸ்ஸை கொண்டுள்ள இந்த போனில் சிம்கார்ட் ஸ்லாட் என்று தனியாக ஒன்று இல்லை. ஆனால் இது இ.சிம்கார்ட்டுகளின் வழியாகச் செயல்படும். அதேசமயம் 4 ஜி எல்டிஈ, வைஃபை உள்ளிட்ட இதர கனெக்டிவிட்டி வசதிகளையும் கொண்டுள்ளது. அதேசமயம் இந்த போனின் பேட்டரி அளவு 2150 எம்ஏஹெச் மட்டுமே கொண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடும்பக் கதையில் நடிக்கும் கவின்!

அயோத்தி இயக்குநர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி!

தில்லியில் பெண் வழக்கறிஞருக்கு கத்திக்குத்து: கணவர் தலைமறைவு
மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


