மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

வேலை தேடுவோர் - வேலைவாய்ப்பு அளிப்போர் சந்திக்க வலைதளம்

வேலை தேடுபவர்களையும், வேலைவாய்ப்பு கொடுப்பவர்களையும் இணைக்கும் வகையில் மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் எம்எஸ்எம்-இ சம்பர்க் வலைதளம் செயல்பட்டு

News image
Updated On :1 அக்டோபர் 2018, 5:02 am

வேலை தேடுபவர்களையும், வேலைவாய்ப்பு கொடுப்பவர்களையும் இணைக்கும் வகையில் மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் எம்எஸ்எம்-இ சம்பர்க் வலைதளம் செயல்பட்டு வருகிறது.

இந்திய தொழில் துறையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் இத்தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. இந்தப் பிரிவு தொழில் நிறுவனங்கள் நாட்டின் மொத்த வேலைவாய்ப்பில் 40 சதவீத அளவு பங்களிப்பைக் கொண்டிருக்கிறது. நாட்டின் மொத்த உற்பத்தியில் 45 சதவீத பங்களிப்பைச் செய்கிறது. எனவேதான் மத்திய, மாநில அரசுகள் இத்தகைய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்காக பல்வேறு மானிய, கடனுதவி திட்டங்கள், சலுகைகளை வழங்கி வருகின்றது. 

மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சகம், திறன் மிகுந்த (ஸ்கில்டு) வகையைச் சேர்ந்த வேலை வாய்ப்பு தேடுவோர், வேலை வாய்ப்பு அளிப்போரை ஒருங்கிணைக்கும் வகையில் வலைதளம் ஒன்றை உருவாக்கியுள்ளது. அது சம்பர்க்-எம்எஸ்எம்இ  என்ற பெயரில் பயன்பாட்டில் உள்ளது. இந்த வலை தளத்தில் வேலை தேடுபவர்களும், வேலை வாய்ப்பு தருபவர்களும் தங்களுடைய விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர், அதில் தங்களுக்கென தனியாக இணையதள உள்ளீட்டுக் கணக்கைத் துவங்க வேண்டும். அந்த உள்ளீட்டுக் கணக்கு மூலம் வலை தளத்திற்குள் சென்று, வேலை தேடுபவர்கள் தங்களுக்கு உரிய வேலையையும், வேலை வாய்ப்பு அளிக்கும் நிலையில் உள்ள நிறுவனர்கள் தங்களுக்குத் தேவையான பணியாட்களையும் தேர்வு செய்து கொண்டு பயனடையலாம்.

இந்த வலைதளத்தில் இதுவரை, வேலை தேடுபவர்கள் 4.46 லட்சம் பேரும், வேலை வாய்ப்பு தருபவர்கள் நான்காயிரம் பேரும் பதிவு செய்து கொண்டுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு: 

http://sampark.msme.gov.in  Email: samparkmsme@gov.in

கட்டணமில்லா தொலைபேசி உதவி எண்: 18001237376

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.