சிறு, குறு தொழில் முனைவோர் மற்ற தொழில் நிறுவனங்களுக்கு விற்பனை செய்ததற்கான பணம் பெற முடியாத சூழ்நிலையில் சிறு, குறு தொழில் முனைவோரை பாதுகாப்பதற்காக "சமாதான்' என்ற வலைதளம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
நிதி, வேலையாட்கள் உள்ளிட்ட பல கடுமையான பல பிரச்னைகளுக்கு இடையே குறு, சிறு தொழில் முனைவோர் தங்களது தொழிலை நடத்தி வருகின்றனர். மற்ற தொழில் நிறுவனங்களுக்கும், பெரிய தொழிற்சாலைகளுக்கும் விற்பனை செய்யும் தங்களுடைய பொருட்களுக்கான விற்பனை விலையை குறிப்பிட்ட சில கால அவகாசத்திற்குள் பெற்றால் மட்டுமே தொடர்ந்து தொய்வின்றி அவர்களால் தொழிலை நடத்தி வர முடியும். குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அவர்களுடைய பொருட்களுக்கான பணம் பொருட்களை வாங்கியவர்களிடமிருந்து கிடைக்காமல் கால தாமதம் ஏற்படும்போது, நடைமுறை மூலதனத்தில் பற்றாக்குறை ஏற்படும். அதனால் தொழிலை தொடர்ந்து நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு, தொழில் முடங்கும் அபாயம் ஏற்படும்.
அதனால் சிறு, குறு தொழில் முனைவோர் சப்ளை செய்த பொருட்களுக்கான பணத்தைப் பெறுவதற்கு உரிய பாதுகாப்பை வழங்கும் வகையில் மத்திய அரசு "சமாதான்' என்ற வலைதளத்தை உருவாக்கியுள்ளது.
சிறு, குறு தொழில் முனைவோர் தாங்கள் சப்ளை செய்த பொருட்களுக்கான பணத்தை பொருட்களை வாங்கியவரிடமிருந்து பெற முடியாத சூழ்நிலையில், அந்தப் பணத்தை வாங்கித் தருவதற்காக, ஒவ்வொரு மாநிலத்திலும் பெசிலிடேஷன் கவுன்சில் என்ற உதவி அமைப்பு அந்தந்த மாநில தொழில் மற்றும் வணிக துறையின் சார்பாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. தாங்கள் சப்ளை செய்த பொருட்களுக்கான பணம் திரும்ப வராதபோது, அதுகுறித்து பெசிலிடேஷன் கவுன்சிலுக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து மனு செய்ய வேண்டும்.
பெசிலிஷேடன் கவுன்சிலில் பணிபுரியும் அதிகாரிகள் அந்த மனுவை பரிசீலனை செய்து பொருட்களை வாங்கிய சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்புவார்கள். பின்னர் இரு தரப்பினரையும் விசாரித்து சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய பணத்தை பெற்றுத் தருவார்கள்.
சம்பந்தப்பட்ட மாவட்ட தொழில் மையம் மூலம் மனு அளிக்கும் நடைமுறை இருந்து வந்தது. தற்போது மத்திய அரசு "சமாதான்' ட்ற்ற்ல்ள்://ள்ஹம்ஹக்ட்ஹஹய்.ம்ள்ம்ங்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற வலைதளத்தை துவக்கியுள்ளது. அதன் மூலம் ஆன்லைனிலேயே பணத்தை பெற்றுத் தரக் கோரி உரிய ஆவணங்களுடன் மனு செய்ய வேண்டும்.
மத்திய அரசின் இந்த வலைதளத்தில் தாங்கள் சப்ளை செய்த பொருட்களுக்கான பணத்தை பெற்றுத் தரக் கோரி இதுவரை 7476 சிறு, குறு தொழில் நிறுவனங்கள் சார்பாக மனு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு மனு செய்யப்பட்டுள்ள தொழில் நிறுவனங்களுக்கு வந்து சேர வேண்டிய பணத்தின் மதிப்பு ரூ.1,912.81 கோடியாகும்.
கோரிக்கை மனு பெற்று விசாரணை நடத்திய பிறகு, நிலுவைத் தொகை குறித்த கோரிக்கை நியாயமாக இருந்தால், அதனைச் செலுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்படும். பெசிலிடேஷன் கவுன்சிலின் உத்தரவுக்குப் பிறகும் பொருளை வாங்கிய நிறுவனம், சப்ளையருக்கு உரிய பணத்தை செலுத்தாமல் இருந்தால், சப்ளை செய்த நிறுவனத்தின் மனுவை வழக்காக மாற்றி, அதன் மீது விசாரணை நடத்தி, பொருட்களுக்கான பணத்தை, கூட்டு வட்டியுடன் செலுத்துவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும்.
உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன், பொருட்களை வாங்கியவர் பெசிலிடேஷன் கவுன்சில் உத்தரவுக்கிணங்க உரிய வட்டியுடன் பணத்தை செலுத்த வேண்டும். இத்தகைய நடைமுறையால் சிறு, குறு தொழில் முனைவோர் பயனடைந்து வருகின்றனர். அவர்களுடைய தொழில் பாதுகாக்கப்படுகின்றது.
மேலும் விவரங்களுக்கு : https://samadhaan.msme.gov.in
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த 10 இந்திய கப்பல்கள்! - மத்திய அரசு அறிவிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


