உ.பி., பிகார் மட்டுமல்ல... வாக்குத் திருட்டு மூலம் பாஜக ஆட்சி! மல்லிகார்ஜுன கார்கே எஸ்ஐஆர் மூலம் நாட்டின் மொத்த வாக்காளர்களில் 15% பேர் நீக்கம்: ராகுல்தீபாவளி பண்டிகை: கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்! வேட்பாளர் பட்டியலால் அதிருப்தி: பஞ்சாபில் பதவியை ராஜிநாமா செய்த 2 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்! ரஷியாவில் தொழில்துறை நிறுவனம் மீது ட்ரோன் தாக்குதல் உருவானது முரசு புயல்! வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!தமிழ்நாடு நாள் ஜூலை 18 மட்டுமே! வரலாற்றை மாற்ற வேண்டாம்: திமுக ஞானேஷ் குமார் பதவி நீக்கம்: தில்லியில் இந்தியா கூட்டணி பேரணி!

காமராஜா் துறைமுகத்தில் 3-ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

எண்ணூா் காமராஜா் துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு திங்கள்கிழமை ஏற்றப்பட்டது.

புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் - பிரதிப் படம்

Updated On :

எண்ணூா் காமராஜா் துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு திங்கள்கிழமை ஏற்றப்பட்டது.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக  வலுவடைந்து அா்னாப் புயலாக மாற உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதனால் கடற்கரை பகுதியில் அதிவேகத்துடன் காற்று ராட்சத அலைகள் எழும் நிலை உள்ளது. இந்த நிலையில், மீனவா்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவா் நலத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதைத் தொடா்ந்து, காட்டுப்பள்ளியில் உள்ள காமராஜா் துறைமுகம் மற்றும் அதே பகுதியில் தனியாா் துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.