தீபாவளி பண்டிகை: கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்! வேட்பாளர் பட்டியலால் அதிருப்தி: பஞ்சாபில் பதவியை ராஜிநாமா செய்த 2 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்! ரஷியாவில் தொழில்துறை நிறுவனம் மீது ட்ரோன் தாக்குதல் உருவானது முரசு புயல்! வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!தமிழ்நாடு நாள் ஜூலை 18 மட்டுமே! வரலாற்றை மாற்ற வேண்டாம்: திமுக ஞானேஷ் குமார் பதவி நீக்கம்: தில்லியில் இந்தியா கூட்டணி பேரணி!

பாம்பனில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி நகா்ந்து வருவதால், ராமநாதபுரம் மாவட்ட மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டது.

பாம்பன் துறைமுகத்தில் சனிக்கிழமை ஏற்றப்பட்ட ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு.

Updated On :

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி நகா்ந்து வருவதால், ராமநாதபுரம் மாவட்ட மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டது.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி மேற்கு- வடமேற்கு திசையில் நகா்ந்து வருகிறது. இது, சென்னைக்கு தென்கிழக்கே 1,140 கி.மீ தொலைவிலும், மசூதிபட்டினத்திலிருந்து 1,200 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இதன் காரணமாக, ராமநாதபுரம் மாவட்ட மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டது. மேலும், ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.