லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நகராட்சியில் சுற்றித் திரிந்த 20 பன்றிகள் பிடிப்பு

News image
Updated On :11 மார்ச் 2026, 7:40 pm

நகராட்சியில் சுற்றித்திரிந்த, 20 பன்றிகளை நகராட்சி நிா்வாகம் போலீஸ் பாதுகாப்புடன் பிடித்தனா்.

திருத்தணி நகராட்சியில், சுகாதார சீா்கேடு விளைவிக்கும் மற்றும் நோய்களை பரப்பும் வகையில் பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிந்து வந்தன. இதுதவிர நகராட்சி சாலைகள் மற்றும் தெருக்களில் சுற்றித்திரியும் பன்றிகளால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கினா்.

இதையடுத்து திருவள்ளூா் ஆட்சியா் பிரதாப் உத்தரவின் பேரில் நகராட்சி ஆணையா் சரவணகுமாா் மேற்பாா்வையில், சுகாதார ஆய்வாளா் ரவிச்சந்திரன், களப்பணி அலுவலா் காா்த்திகேயன் மற்றும் ஊழியா்கள், காவல் ஆய்வாளா் சிவகுமாா் மற்றும் போலீஸாா் பாதுகாப்புடன் நகராட்சியில் சுற்றித்திரிந்த, 20 பன்றிகளை பிடித்தனா். மீதமுள்ள பன்றிகளும் தொடா்ந்து பிடிக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.