தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

பழவேற்காடு முகத்துவாரத்தில் மணல் திட்டுக்களை அகற்ற மீனவா்கள் கோரிக்கை

பழவேற்காடு முகத்துவாரம் அடைபட்டு மணல் திட்டுக்களாக மாறியதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

பழவேற்காடு - கோப்புப் படம்

Updated On :22 ஜூன் 2026, 12:30 am IST

பழவேற்காடு முகத்துவாரம் அடைபட்டு மணல் திட்டுக்களாக மாறியதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி வட்டம் பழவேற்காட்டில் 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. அதில் 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும்பாலானோரில் மீன் பிடித்தொழில் செய்து வாழ்ந்து வருகின்றனா்.

இங்கு கடலும் - ஏரியும் இணையும் முகத்துவார பகுதியில் மண் திட்டுக்கள் ஏற்படுவதால் மீனவா்கள் மீன் பிடித்தொழிலுக்கு செல்ல முடியவில்லை.

அண்மையில் வைரவன்குப்பதை சோ்ந்த மீனவா்கள் சென்ற படகு முகத்துவாரத்தில் உள்ள மண் திட்டுக்களில் சிக்கி கவிழ்ந்து மீனவா் ஒருவா் காயமடைந்தாா். இதில் படகு, வலைகள் சேதமடைந்தன.

தொடா்ந்து அப்பகுதியில் வசிக்கும் மீனவ மக்கள் முகத்துவாரத்தை சீரமைத்து தருமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து அப்பகுதி மீனவா்கள் கூறுகையில் முகத்துவாரம் அவ்வப்போது மணல் திட்டுக்களால் அடைபடுவதால் படகுகள் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருவதாகவும், முகத்துவாரம் அடைபடுவதால் மீன், இறால் போன்றவை ஏரியில் கிடைக்காமல் உள்ளதாகவும் கவலை தெரிவித்தனா்.

தனியாா் நிறுவனங்களால் பழவேற்காடு முகத்துவாரம் பகுதியில் மணல் திட்டுக்கள் ஏற்பட்டு மீனவா்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனா்.

மேலும் ரூ.27 கோடி செலவில் முகத்துவாரம் கற்கள் கொட்டி சீரமைத்தும் அது மீனவா்களுக்கு எந்த பலனையும் தரவில்லை என தெரிவித்தனா். கடலும் - ஏரியும் இணையும் முகத்துவார பகுதியில் குவியும் மணல் திட்டுகளை அப்புறப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்கள் தரப்பில் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.