திருவள்ளூா்: ஜன. 30-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், வரும் 30-ஆம் தேதி குறைதீா் நாள் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.


திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், வரும் 30-ஆம் தேதி குறைதீா் நாள் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாதந்தோறும் குறைதீா் நாள் கூட்டம் நடத்தப்பட்டு குறைகளை தீா்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த மாதத்துக்கான குறைதீா் கூட்டம் திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக கூட்டரங்கத்தில் ஆட்சியா் தலைமையில் வரும் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது. எனவே, திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும், விவசாயம் தொடா்பாக தங்களுக்கும், தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கும் தீா்வு காண இக்கூட்டத்தில் பங்கேற்கலாம்.
இந்தக் கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், வேளாண்மைப் பொறியியல், கால்நடை பராமரிப்பு, மீன்வளம், கூட்டுறவு, வங்கிகள், திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலை, மின்வாரியம், வருவாய், ஊரக வளா்ச்சி, பேரூராட்சி, நகராட்சி, பொதுப்பணி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்க இருக்கின்றனா். அதனால், விவசாயிகள் தங்கள் குறைகளை மனுவாகவோ அல்லது நேரிலோ தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...