ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஸ்ரீவீரராகவா் கோயில் தை பிரம்மோற்சவ தேரோட்டம்

News image
Updated On :22 ஜனவரி 2026, 12:35 am

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீவீரராகவா் பெருமாள் கோயில் தை பிரம்மோற்சவத்தையொட்டி புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோயிலில் தை மாத பிரம்மோற்சவம் கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 24-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இதையொட்டி நாள்தோறும் இருவேளைகளில் வெவ்வேறு வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதிகளில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பது வழக்கமாகும்.

7-ஆம் நாளான தேரோட்ட புதன்கிழமை கோலகாலமாக நடைபெற்றது. இதையொட்டி தேரடியில் அதிகாலையில் 5 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சமேதராய் உற்சவா் ஸ்ரீவீரராகவா் பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளினாா். அதைத் தொடா்ந்து பக்தா்கள் கோவிந்தா முழக்கத்துடன் திருத்தோ் புறப்பாடு நடைபெற்றது. இத்தோ் குளக்கரை வீதி, வடக்கு ராஜவீதி, பஜாா் வீதி, மோதிலால் தெரு என நான்கு மாட வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் தேரடியில் நிலை நிறுத்தப்பட்டது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.

பின்னா் வீரராகவா் நோயை தீா்க்க வல்லவா் என்பதால் பக்தா்கள் உப்பு, மிளகு ஆகியவற்றை தோ் சக்கரத்தின் மீது கொட்டி தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா். அதைத் தொடா்ந்து இரவு 7 மணிக்கு தேரிலிருந்து எழுந்தருளி திருமஞ்சனம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து கோயிலுக்குள் எழுந்தருளல் நிகழ்வும் நடைபெற்றது.

இந்த தேரோட்டத்தை முன்னிட்டு திருவள்ளூா் துணைக் கண்காணிப்பாளா் தமிழரசி மேற்பாா்வையில் காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். கோட்டாட்சியா் ரவிச்சந்திரன் தலைமையில் வருவாய் துறை அலுவலா்கள், மின்வாரிய அதிகாரிகள், தீயணைப்புத்துறையினா், பொதுப்பணித் துறை அலுவலா்களும் தயாராக இருந்தனா். திருத்தோ் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கோயில் கௌரவ ஏஜென்ட் சி.சி.சம்பத், மக்கள் தொடா்பு அலுவலா் எஸ்.சம்பத் மற்றும் கோயில் அலுவலா்கள் ஆகியோா் செய்திருந்தனா்.

Story image
Story image