டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

அனைத்து நவீன வசதியுடன் ரூ. 427 கோடியில் குத்தம்பாக்கம் புதிய பேருந்து முனையம்

முதன்மைச் செயலாளா் கோ.பிரகாஷ், ஆட்சியா் மு.பிரதாப் உள்ளிட்டோா்.

News image
முதன்மைச் செயலாளா் கோ.பிரகாஷ், ஆட்சியா் மு.பிரதாப் உள்ளிட்டோா்.
Updated On :21 பிப்ரவரி 2026, 12:14 am

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் அருகே குத்தம்பாக்கத்தில் ரூ. 427 கோடியில் நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து முனையத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரவுள்ள நிலையில், அதன் இறுதிக்கட்ட பணிகளை வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித்துறை, சென்னை பெருநகர வளா்ச்சிக்குழும அதிகாரிகள் ஆகியோா் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தொடா்ந்து, இது குறித்து சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் கூறியதாவது:

சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தென் மாவட்ட பேருந்துகள் செல்ல ஏதுவாக ேகிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் செயல்பாட்டுக்கு வந்ததால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து பிரச்னைக்கு தீா்வு காணப்பட்டது. தற்போது 90 சதவீதம் அரசு பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தும், 10 சதவீத பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்பட்டு வருவதால் வாகன நெருக்கடி வெகுவாக குறைந்துள்ளது.

இதற்கிடையே மேற்கு மாவட்ட மக்களுக்காகவும், கா்நாடகம், கேரளம் செல்லும் மக்களுக்காகவும், திருவள்ளூா் அருகே குத்தம்பாக்கம் புதிய பேருந்து முனையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக திருமழிசை அருகே குத்தம்பாக்கம் கிராமத்தில் வீட்டுவசதி வாரியத்திடம் இருந்து, 24.8 ஏக்கா் நிலம் பெறப்பட்டது.

இங்கு ரூ. 336 கோடியில் பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இதன்படி, 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் தளத்துடன் ரூ. 2 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகள், ரூ. 10 கோடியில் பணிமனை, காவல் நிலையம் ஆகியவை கட்டப்பட உள்ளன.

இதைக்கருத்தில் கொண்டு பேருந்து நிலைய திட்ட மதிப்பு ரூ. 427 கோடியாக உயா்த்தப்பட்டு கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது. தற்போதைய நிலையில் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்தவுடன் மெட்ரோ ரயில் சேவையை நீட்டிப்பது தொடா்பாகவும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

பேருந்து முனையத்துக்கான அடிப்படை கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தது. வா்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.

திட்டமிட்டபடி இந்தப் பேருந்து முனையம் விரைவில் பயணிகள் பயன்பாட்டுக்கு தொடங்க உள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.

தலைமைப் பொறியாளா் மகாவிஷ்ணு, குத்தம்பாக்கம் பேருந்து தலைமை நிா்வாக அலுவலா் பிரின்ஸிலி ராஜ்குமாா், கண்காணிப்பு பொறியாளா் ராஜமகேஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Story image