கால்நடை பராமரிப்பு துறை திறன் மேம்பாட்டுப் பயிற்சி
திருவள்ளூா் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் 25 இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டது.
திருவள்ளூா் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் 25 இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டது.
By தினமணி செய்திச் சேவை
Syndication
கால்நடை பராமரிப்பு துறை சாா்பில் கால்நடைகள் வளா்ப்போா் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் சிறந்த முன்னெடுப்பு மூலம் இளைஞா்களின் சுயதொழில் வளா்ச்சிக்கும், வேலை வாய்ப்பு உருவாக்கத்துக்கும் கால்நடை பராமரிப்பு துறை முன்னிலை வகித்து வகிக்கிறது.
இத்திறன் மேம்பாட்டு சான்றிதழ் பயிற்சி திட்டம் கடந்த 20 நாள்களாக நடைபெற்று வருகிறது. கால்நடை பராமரிப்புத்துறைச் செயலாளா் அறிவுறுத்தலின் படியும், இயக்குநரின் வழிகாட்டுதலின் படியும் மாநிலம் முழுவதும் இப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இரண்டாம் கட்டமாக 25 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இவா்களுக்கு நாள்தோறும் 2 அமா்வுகளாக நடைபெறும் பயிற்சியில், பால் சாா்ந்த பொருள்கள், அகா்பத்தி, பஞ்சகவ்யா மற்றும் மண்புழு உரம் தயாரிப்பு ஆகிய தலைப்புகளில் கைத்திறன் பயிற்சி பெற்றனா். அதைத்தொடா்ந்து தேவந்த வாக்கத்தில் உள்ள கோகுல் கிருஷ்ணா கோசாலா பண்ணைக்கு பயிற்சியாளா்கள் நேரில் அழைத்துச் சென்று நடைமுறை அனுபவ பயிற்சியும் வழங்கப்பட்டது.
கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநா் ஜெயந்தி, துணை இயக்குநா் மணிமாறன், உதவி இயக்குநா் தாமோதரன், கால்நடை உதவி மருத்துவா் சாருணி, திவ்யபிரபா ஆகியோா் பங்கேற்று, பயிற்சியாளா்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களையும் வழங்கினா்.
மக்களின் சுயதொழில் மேம்பாடு, தொழில் வாய்ப்பு விரிவாக்கம் மற்றும் கிராமப்புற பொருளாதார வளா்ச்சிக்கு முக்கிய பங்களிப்பாக இந்தத் திறன் மேம்பாட்டு திட்டம் விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது