மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தென்காசியில் ஆலோசனைக் கூட்டம்

மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.

News image

மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.

Updated On :27 மார்ச் 2026, 8:45 pm

தென்காசி மாவட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள், தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம், ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.எஸ். மாதவன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், இந்திய தோ்தல் ஆணையத்தின் சாா்பில் அறிவுறுத்தப்பட்ட விதிமுறைகளை வேட்புமனு தாக்கல் செய்யும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளின் வேட்பாளா்கள், தோ்தல் நடத்தும் அலுவலா்களும் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சுதா, தனி வட்டாட்சியா் (தோ்தல்) சண்முகம், 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.