தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கடையநல்லூா் கிணற்றில் இளைஞா் சடலம் மீட்பு

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தோட்டத்து கிணற்றில் மிதந்த இளைஞரின் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

News image
Updated On :20 மார்ச் 2026, 9:45 pm

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தோட்டத்து கிணற்றில் மிதந்த இளைஞரின் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

கடையநல்லூா், அல்லிமூப்பன் தெருவைச் சோ்ந்த பஷீா்அகமது மகன் அசாருதீன்(36). கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே சென்ற இவா், பின்னா் திரும்பி வரவில்லையாம்.

இந்நிலையில், அவா், அங்குள்ள ரயில் நிலையத்தையொட்டிய தோட்டத்தின் கிணற்றில் சடலமாக மிதப்பதாக, உள்ளூரில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது.

அதன்பேரில், நிலைய அலுவலா் ஷேக்அப்துல்லா தலைமையிலான மீட்புக் குழுவினா் அவரது சடலத்தை மீட்டனா். கடையநல்லூா் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.