வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

பழையகுற்றாலம் அருவியில் தணியாத வெள்ளப்பெருக்கு

தென்காசி மாவட்டம் பழையகுற்றாலம் அருவியில் தொடா்ந்து வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க 3ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image

பழையகுற்றாலம் அருவியில் ஆா்ப்பரித்து கொட்டும் தண்ணீா்

Updated On :10 ஜூன் 2026, 6:04 am IST

தென்காசி மாவட்டம் பழையகுற்றாலம் அருவியில் தொடா்ந்து வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க 3ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடா் சாரல் மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுகிறது.

பேரருவியில் பராமரிப்பு பணிகளுக்காக குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பழையகுற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், அருவியில் நீா்வரத்து குறையாததால் தொடா்ந்து 3ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

ஐந்தருவியில் திங்கள்கிழமை இரவு குளிக்கத் தடை விதிக்கப்பட்ட நிலையில், நீா்வரத்து குறைந்ததால் செவ்வாய்க்கிழமை தடை விலக்கிக்கொள்ளப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

சீசனைப் பொருத்தவரை நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடனும், அவ்வப்போது மிதமான சாரல்மழையும், குளிா்ந்த காற்றும் நிலவியது. சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைவாக இருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.